சமூக வலைதளங்களில் யாரையாவது விமர்சித்தாலும், தமிழ் மொழியை மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு சர்வதேச மாநாட்டில் தமிழிசை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தன்னை அவதூறாகப் பேசியதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் மக்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரியில் துணை நிலை கவர்னர் பதவிகளை தான் வகிப்பதை விமர்சிக்கும் போது ஒருமையில் பேசினார்.
“இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பது எவ்வளவு கடினம் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இரண்டு மாநிலங்களுக்குத் தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழ்ப் பெண் இருப்பதைப் பற்றி ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்.
தமிழில் யாரையாவது திட்டினாலும், அந்த மொழியை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். இல்லையெனில், நீங்கள் தமிழனாக இருக்க தகுதியற்றவர்,” என்றார்.
கவிஞர் பாரதியாரின் கவிதைகள் மற்றும் உரைநடைகள் குறித்தும் தமிழிசை பேசினார். பாரதியார் வாழ்ந்த எட்டயபுரம், திருச்சி, புதுச்சேரியில் இருந்து மண் கொண்டு வந்து பலா மரம் நடுவதற்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் தமிழிசை குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“