உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை மொத்தமாக சிதைத்து, பதுங்கியிருந்த 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட காரணமான ரஷ்ய தளபதி மீது பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யாவின் கொடூர தளபதிகளில் ஒருவரான Mikhail Mizintsev மீது பிரித்தானிய அரசு புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள நாடக அரங்கம் ஒன்றில், ரஷ்ய குண்டுவீச்சுக்கு பயந்து பதுங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் Mikhail Mizintsev.
குறித்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட கொத்தாக 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரித்தானிய அரசு தளபதி Mikhail Mizintsev மீது தடைகளை விதித்துள்ளது.
இவருடன் மேலும் 14 ரஷ்யர்கள் குறித்த தடை விதிப்பில் சிக்கியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும், உக்ரைனில் விளாடிமிர் புடின் தோல்வியடைவதை உறுதி செய்யவும் அதிக தடைகளை விதிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாடக அரங்கில் 300 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தளபதி Mikhail Mizintsev போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
சிரியாவில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவரும்,
அப்பாவி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்ததும் தளபதி Mikhail Mizintsev தலைமையிலான துருப்புகள் என்றே கூறப்படுகிறது.