நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. இது இனி ஏற்றம் காணுமா? அல்லது சரிவினைக் காணுமா?
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்று தொடக்கத்திலேயே சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போதும் பெரியளவிலான மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.
கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் சரிந்தும், பெட்ரோல் – டீசல் விலை தொடர் உயர்வு.. மக்கள் கண்ணீர்..!
சர்வதேச சந்தைகள்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், ரஷ்யா படைகள் வெளியேறுவதாக கூறிய நிலையில் கூட, தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டது. அதோடு ரஷ்ய படைகள் வெளியேறுவதாக கூறப்பட்டாலும் அதற்கான எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்று பைடன் எச்சரித்திருந்தார். இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
தொடக்கம் எப்படி?
தொடக்கத்தில் சென்செக்ஸ் 14.26 புள்ளிகள் அதிகரித்து, 58,698.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 6.80 புள்ளிகள் அதிகரித்து, 17,505.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி, மேக்ஸ் ஹெல்த்கேர், கோத்ரேஜ் ப்ராபர்டீஸ், ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்று பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதில் பிஎஸ்இ ஆயில் & கேஸ் மட்டும் 1% மேலாக ஏற்றத்திலும், மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐஓசி, பஜாஜ் பைனான்ஸ், எம் & எம், ஹீரோ மோட்டோ கார்ப், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், சிப்லா, யுபிஎல், ரிலையன்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி , ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், பவர் கிரிட் கார்ப், விப்ரோ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 10.12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 101.79 புள்ளிகள் அதிகரித்து, 58,785.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 30.1 புள்ளிகள் அதிகரித்து, 17,528.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade flat amid mixed global cues, focus in ONGC, Axis bank, max health
opening bell: indices trade flat amid mixed global cues, focus in ONGC, Axis bank, max health/முதலீட்டாளர்களை குழப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி..!