இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன.
கடவுளின் உதவியால் மழை இல்லை என்றால், எரிபொருள் இல்லை என்றால் புத்தாண்டை இருளில் கழிக்க வேண்டியிருக்கும் என மின் பொறியாளர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் டீசல் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து நீக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு இலங்கை போக்குவரத்து சபைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று வரையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர வாய்ப்புள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இந்திய உதவியுடன் இரண்டு எரிபொருள் தாங்கிகள் எமக்கு கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.