
மூப்பில்லா தமிழ் தாயே – ஆனந்த் மகேந்திராவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதில்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூப்பில்லா தமிழ் தாயே என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் தாமரை எழுதி இருக்கிறார். சைந்தவி பிரகாஷ், கதிஜா ரஹ்மான், பூவையார் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர். கடந்த 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போவில் இப்பாடல் வெளியிடப்பட்டதை அடுத்து ஏ. ஆர். ரகுமானின் மஜ்ஜா யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியானது.
இந்நிலையில் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ என பாராட்டி இருக்கிறார்.
இவருக்கு பதில் கொடுத்துள்ள ரஹ்மான், ‛‛மிக்க மகிழ்ச்சி. காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக மூப்பில்லா தமிழ் இருக்கிறது என்றும் சொல்கிறோம். மிக்க நன்றி'' என்றார்.