உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது.
ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை ஆய்வு செய்த பிறகு,
தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் வீடியோவில் உள்ள ஆயுதம் உண்மையில் ஹ்வாசாங்-15 என்றும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவால் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, ஏவுகணை சோதனைக்கு பின்னர் கிம் ஜோங் உன் வெளியிட்ட வீடியோ ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில், அதை திசை திருப்பவே, கிம் ஜோங் உன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகொரியாவின் வரலாற்றில் இவ்வாறான ஏவுகணை சோதனை முன்னெடுக்கப்பட்டதில்லை எனவும், இது உலக நாடுகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும் எனவும், வடகொரிய அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.