யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை : இம்ரான்கான்| Dinamalar

இஸ்லாமாபாத்: நான் பாகிஸ்தான் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன். யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

பாக்., பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. வரும் 3-ம்தேதி இம்ரான் மீது பார்லி.,யில் இது குறித்த வாக்கெடுப்பு நடத்த உள்ளது. அதுவரையில் பார்லி., ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:

இந்த பேச்சு நேரலையானது. பதிவு செய்யப்படவில்லை. நான் அரசியல் பின்னணியில் இருந்து வரவில்லை. கடவுள் எனக்கு புகழ், செல்வம், எல்லாவற்றையும் கொடுத்தது எனக்கு அதிர்ஷ்டம். இன்று எனக்கு எதுவும் தேவையில்லை, அவர் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாகிஸ்தான் என்னை விட 5 வயதுதான் மூத்தது, நான் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன், எனது நோக்கம் நீதி மற்றும் மனிதநேயம், மூன்றாவது சுயமரியாதை.

சிறு வயதில் பாகிஸ்தான் உச்சத்துக்கு உயர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதை அறிய தென்கொரியா பாகிஸ்தானிற்கு வந்தது. மலேசிய இளவரசர்கள் என்னுடன் படித்தார்கள். மத்தியகிழக்கு நாடுகள் எங்களின் பல்கலைகழகங்களுக்கு வந்தன. இவ்வாறு ஒரு காலத்தில் மற்ற நாடுகள் எங்களிடம் இருந்து கற்றுக்கொண்டன, இப்போது பாகிஸ்தானை அவமானப்படுத்துவதை நான் பார்க்கிறேன்.

latest tamil news

யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை

நான் அரசியலுக்கு வரும்போது யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை, பாகிஸ்தானை தலைகுனிய விடமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். கிரிக்கெட் காரணமாக இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட பாகிஸ்தானியன் நான். அமெரிக்காவை எனக்கு நன்றாகத் தெரியும். இங்கிலாந்து எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் நண்பர்களாக இருந்த அதே அமெரிக்கா எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.

இம்ரானை நீக்க வேண்டும்

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், பாகிஸ்தான் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெளிநாட்டு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு இம்ரான் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.