உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று தமிழரான திருமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழத்தை சேர்ந்த டி.எஸ் திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதராக உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்தே சூழல் மோசமடைந்து வருகிறது.
உக்ரைன்- ரஷ்யா போா்ச் சூழல் ஏற்கெனவே வளரும் நாடுகள் உள்பட சா்வதேச பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைன் விவகாரத்தில் விரைவில் தீா்வு எட்டப்படும்.
ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள வேண்டும்.
உக்ரைனில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு அகதிகளுக்காக மருந்துப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் என 90 டன் நிவாரணப் பொருள்களை உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது என கூறியுள்ளார்.