வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ரஷ்ய வெளியுறைவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் டில்லி வருகைக்கு அமெரிக்கா, ஆஸி., அரசுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் -ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இது ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. காலாகாலமாக ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் உள்ள இந்தியா இதர குவாட் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைப் போல ரஷ்யாவுக்கு நேரடி வர்த்தகத்தை தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இது ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க அரசுகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த இரு நாடுகளின் முக்கிய அதிகாரிகள் பலர் இந்தியாவுக்கு எதிராக இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் கினா ரைமோண்டோ கூறுகையில், வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கவும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் நிற்கவும், உக்ரைன் மக்களுடன் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்காக நிற்க வேண்டிய நேரம் இது. ரஷ்ய அதிபர் புடினின் போருக்கு நிதியளிப்பது மற்றும் அதற்கு எண்ணெய் ஊற்றுவது கூடாது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்திய தலைநகர் டில்லிக்கு வருகை தந்தது, மேலும் இந்தியாவுடனான ரஷ்ய பொருளாதார ஒப்பந்தங்களை வலுப்படுத்தியது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கானா கூறியுள்ளார்.
இதேபோல ஆஸ்திரேலியா வர்த்தகத் துறை அமைச்சர் டான் டேஹான் கூறுகையில் கடந்த இரண்டாம் உலகப் போரை அடுத்து உலக ஜனநாயக நாடுகள் பின்பற்றும் முறையை தற்போது கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று மறைமுகமாக இந்தியாவை விமர்சித்துள்ளார்.
Advertisement