வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாகலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகளை குறைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அசாமில் 23 மாவட்டங்களில் முழுமையாகவும், ஒரு மாவட்டத்தில் பகுதியாகவும், மணிப்பூரில் 6 மாவட்டங்களில் 16 போலீஸ் ஸ்டேசன்கள், நாகலாந்தில் 7 மாவட்டங்களில் 15 போலீஸ் ஸ்டேசன் வரம்பில் வரும் பகுதிகளில் ஆயுதப்படை சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமித்ஷா கூறுகையில், தொடர் முயற்சியால் பாதுகாப்பு சூழ்நிலை மேம்பட்டுள்ளதுடன், வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்பியுள்ளது. இதற்காக அப்பிராந்திய மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த பல தசாப்தங்களாக வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. தற்போது, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கான புதிய சகாப்தம் துவங்கி உள்ளது எனக்கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள இந்த மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் முழுமையாக நீக்கப்படவில்லை. இந்த சட்டம் அங்கு பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement