புதுடெல்லி,
நாகாலாந்து, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளின் பரப்பளவை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அசாமில் 23 மாவட்டங்களிலும், மணிப்பூரில் 6 மாவட்டங்களிலும், நாகாலாந்தில் 7 மாவட்டங்களிலும் ஆயுதப்படை சிறப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இந்த மாநிலங்களில் பாதுகாப்பு சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் துரிதமான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக சிறப்பு மிக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.