Tamil Nadu Political Leaders Reaction About Vanniyar Reservation Cancelled : வன்னியர்கள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று கூறியிருப்பது பாமக மற்றும் வன்னியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய வகுப்புக்கான இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அறிவித்தது. அதன்பிறகு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக வன்னியர்கள் இடஒதுக்கீட்டுக்காக அரசாணையை வெளியிட்டது.
ஆனால் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை நீதிபதிகள், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு செய்ய முடிவும் என்று கூறி வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தெடர்பான விசாரணையில் தமிழக அரசு தரப்பிலும், பாமக மற்றும் வன்னியர்கள் தரப்பிலும் உள்ள நியாயமான கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வன்னியர்கள் இடஒதுக்கிடு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்பதால் இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் எல்.ராகேஷ்வர ராவ் மற்றும் பி.ஆர்,கவாய் ஆகியோர் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு பாமக மற்றும் வன்னியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக புள்ளி விபரங்களை சேகரித்து மீண்டும் சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமாகன துரைமுருகன், வன்னியர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதே தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும்.
சமூக நீதிக்கான களத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டம் தொடரும். pic.twitter.com/1Ry3EHwjlI
— Velmurugan.T (@VelmuruganTVK) March 31, 2022
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும். சமூக நீதிக்கான களத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ்
அதிமுக ஆட்சியில் அரசியல் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. முக்குலத்தோர் புலிப்படை தனித்துவமாக கூறிய வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது முக்குலத்தோர் புலிப்படையினருக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.