வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்தச் சூழலில், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
இதையும் படிக்க: நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் – திமுக, அதிமுக எம்பிக்கள் கோரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM