வாகன ஓட்டியை ஆக்ரோஷமாக துரத்திய யானை.. அலறியடித்து ஓட்டம் பிடித்த நபர்..

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பாபவிநாசம் செல்லும் மலைப்பாதையில், வாகன ஓட்டியை ஒரு யானை துரத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் உள்ள பாபவிநாசம் அணைக்கு சென்று பக்தர்கள் நீராடுவது வழக்கம். அந்த வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இருவரை திடீரென சாலையை கடக்க வந்த யானை ஒன்று துரத்தியது.

பின்னர் சிறிது தூரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதனை அந்த வாகனத்தில் வந்த நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.