விருதுநகர்: விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போதை மாத்திரைகள், போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.