ஜார்க்கண்ட்
மாநிலத்தில் உள்ள பியாங் கிராமத்தைச் சேர்ந்த
கேதார் பிரசாத் மஹ்தோ
என்பவர் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தனது கிராம மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பது விருப்பமானதாக இருந்தது. மின்சாரம் இல்லாமல், பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததைக் கண்டு கேதார் வருத்தமடைந்தார்.
அதுமட்டுமில்லாமல், கிராம சிறுவர்களின் படிப்பும் மின் வெட்டால் தடைபட்டு வந்தது. இதற்கான சரியான தீர்வை நோக்கி எலக்ட்ரீஷியன் கேதரின் எண்ணோட்டங்கள் இருந்தது. தான் கல்வி கற்க முடியாமல் போன சூழல், வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
கிராம மக்களுக்காக திட்டம்
33 வயதான கேதார், தான் 18 ஆண்டுகளாக உழைத்து சேர்த்த பணத்தை முதலீடு செய்ய விரும்பினார். அவர் முதலீடு செய்தது, வங்கியிலோ அல்லது பத்திரத்திலோ அல்ல. புதிய நீர் மின் நிலையத்தை அதில் உருவாக்க முடிவு செய்தார். அவர் கையில் இருந்த 2 லட்ச ரூபாய் இதற்கு போதாது என்பதை உணர்ந்து கொண்டார்.
YouTube அறிமுகப்படுத்தும் புதிய Share Clips வசதி – எப்படி பயன்படுத்துவது!
தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட கேதார், ஸ்கிராப் பொருள்களில் இருந்து ஒரு டர்பைனை உருவாக்கி, அதன் மூலம் கிராம மக்களுக்கு மின்சாரம் கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி, தனது பணியைத் தொடங்கி, தேவையற்று இருந்த ஸ்கிராப் பொருள்களைக் கொண்டு நீர் மின் நிலையத்திற்கான டர்பைனை உருவாக்கினார்.
தற்போது, கேதாரின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பல மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது. அந்த கிராம மக்கள் கேதாரை கொண்டாடி வருகின்றனர். தொழில்நுட்ப உதவியுடன் பெரும் நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதற்கு சான்றாக கேதார் உருவெடுத்துள்ளார்.
குப்பையில் இருந்து உருவான நீர் மின் நிலையம்
இது குறித்து பேசியிக்கும் கேதார், “எனது பள்ளி நாள்களில், நீர்மின் உற்பத்தி என்ற தொழில்நுட்பம் இருப்பதை நான் அறிந்துகொண்டேன். இது டர்பைன்கள், டைனமோ மற்றும் மோட்டார் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையாகும். மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீரோட்டம் பயன்படுத்தப்படுகிறது.
நான் சில ஆண்டுகளாக, குப்பை விற்பனையாளர்களிடம் இருந்து மின் சாதனங்களிலிருந்தும் தூக்கி எறியப்பட்ட பொருள்களை வாங்கத் தொடங்கினேன். இந்த பொருள்களை வாங்குவதற்காக எலக்ட்ரீஷியன் வேலையை பார்க்கத் தொடங்கினேன். அதில் கிடைக்கும் பணத்தை சேமிக்க உயர்கல்வியைத் தொடராமல் கைவிட்டேன்.
…
அடுத்த செய்திமலிவு விலை boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் – விலை ரொம்ப கம்மி!