நாம் செய்யும் சமையல் மணம் மற்றும் சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். அந்த வகையில் இந்தியாவில் சமையக்கப்படும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியத்திற்கு குறை இல்லால் இருக்கும் என்று கூறலாம். இதற்கு முக்கிய காரணம் சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள்தான். இந்த மசாலா பொருட்கள் மணம் சுவைக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு ஆரோக்கியத்தின் அனைத்து குணங்களையும் பெற்றுள்ளது. செரிமாண பிரச்சினை, பசியின்மை, சளி இருமல் குமட்டல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு கிராம்பு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக கிராம்பில் காணப்படும் கார்மினேடிவ் என்ற பண்கு செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகளுக்கு நன்மை தருகிறது. பல் வலி, பல்சொத்தை, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட வாய் சுகாதாரத்திற்கும் தீர்வளிக்க உதவுகிறது. தினமும் பருகும் டீயில், சிறிதளவு கிராம்பை தட்டி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல், செரமாணப்பிரச்சினை, தலைவலி போன்ற பிரச்சினைகள் தீரும்.
பல நன்மைகளை அளிக்கும் கிராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு எப்படி தீர்வு தருகிறது?
இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்ட கிராம்பு, உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழச்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் செரியமானத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகம் பெற்றுள்ளது. இன்சுலின் அளவை பராமரிப்பதில் கிராம்பின் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராம்பு டீ செய்வது எப்படி?
தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் கொதிக்கும்போது அதில் சிறிதளவு கிராம்பை தட்டி போட்டு அதனுடன் டீத்தூள் சேர்த்து கொதிக்கை வைத்து கிராம்பின் வாசனை வரும்போது இறக்கிஅதனை வடிகட்டி குடிக்கலாம். இதை தினமும் செய்து வந்தால நீரிழிவு நோய்கை கட்டுப்படுத்தலாம். மேலும் முகத்தில் முகப்பருக்கள் தழும்புகள், சரும பிரச்சினை உள்ளிட்டவற்றை போக்கவும், கிராம்பு பயன்படுகிறது.
கிராம்பு எண்ணெயுடன் சிறிது தேன் மற்றும் ஒரு துளி சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலந்து முகப்பருக்களில் தேய்த்துவிட்டு காய்ந்ததும் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்ய பருக்கள் போகும். முகத்தில் அழகு சேரும்.