
'ஷாட் பூட் த்ரீ' படத்தில் கணவன் மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு – சினேகா
அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்யநாதன் தற்போது 'ஷாட் பூட் த்ரீ' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ராஜேஷ் வைத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் மனைவியாக இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பூவையார், ப்ரணிதி, கைலாஷ், வேதாந்த் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.