பாகிஸ்தான் அரசியல்
மீண்டும் ஒரு பரபரப்பான கட்டத்துக்குத் தாவியுள்ளது. பிரதமர் இம்ரான்கான் பதவி தப்புமா.. அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தான்
அரசியல் எப்போதுமே அமைதியானதா இருந்தது இல்லை. பாகிஸ்தான் உருவாகி, முதல் பிரதமராக பதவியேற்ற லியாகத் அலிகான் தனது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முகம்மது அலி ஜின்னாவால் பிரதமராக நியமிக்கப்பட்டவர்தான் லியாகத் அலி கான். அவரது கதியே அதோ கதியாகத்தான் போனது.
முதல் பிரதமரில் ஆரம்பித்த இந்த விபரீத அரசியல் போக்கு இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது. பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் முழுமையாக பதவி வகித்ததில்லை. பாதியிலேயே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். அல்லது ராணுவப் புரட்சி நடந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும்.
போனை எடுங்க.. புடினுடன் பேசுங்க.. போரை நிறுத்துங்க.. மோடிக்கு உக்ரைன் கோரிக்கை
முதல் பிரதமரான லியாகத் அலிகான் நான்கரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார். அடுத்து வந்தவரான காஜா நசிமுதீன் ஒன்றரை வருடம் இருந்தார். இவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். முகம்மது அலி போக்ரா 2 வருடமே ஆட்சியில் இருந்தார். செளத்ரி முகம்மது அலி ஒரு வருடம் பிரதமராக இருந்தார். பாகிஸ்தானில் அதுவரை முஸ்லீம் லீக் ஆட்சிதான் நடந்தது. இவர்தான் முதல் கூட்டணி அரசை அமைத்தவர். முஸ்லீம் லீக், அவாமி லீக், குடியரசுக் கட்சி இணைந்து ஆட்சியமைத்தன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் ஆட்சியை இழந்தார்.
ஹுசேன் ஷாஹீத் சுர்வார்டி – ஒரு வருடம் பிதமராக இருந்தார். கட்சியில் பிடியை இழந்ததால் ஆதரவை பறி கொடுத்து ஆட்சியையும் இழந்தார். இவருக்கு அடுத்து வந்த இப்ராகிம் இஸ்மாயில் சுந்திரிகர் என்பவர் வெறும் 60 நாள் மட்டுமே பிரதமராக இருந்தவர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் இவரை விரட்டி விட்டனர்.
நம்ம ஊரில் வாஜ்பாய் 13 நாள் பிரதமராக இருந்தது போல பாகிஸ்தானிலும் ஒருவர் 13 நாள் பிரதமராக இருந்துள்ளார். அவரது பெயர் நூருல் அமீன். 1971ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்தார். இந்த ஆண்டில்தான் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரில் குதித்தது. படு தோல்வியும் அடைந்தது. வங்கதேசம் பிறந்தது.
ஜுல்பிகர் அலி புட்டோ. மூன்றே கால் வருடம் ஆட்சியில் இருந்தவர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முதல் பிரதமர். இவர் ஆரம்பத்தில் அதிபராக இருந்தவர். பின்னர் பிரதமருக்கு முழு அதிகாரத்தையும் மாற்றி அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியதைத் தொடர்ந்து பிரதமர் ஆனவர். ஆனால் ராணுவச் சட்டத்தின் மூலம் இவரது ஆட்சியை கலைத்தார் அப்போதைய ராணுவ தளபதி ஜியா உல் ஹக். பின்னர் ஜூல்பிகர் அலி புட்டோ மீது ஜியா உல் ஹக் வழக்குத் தொடர்ந்து தூக்கிலிட்டார்.
“இது தப்பு.. சரியில்லை”.. இந்தியா – ரஷ்யா பேச்சு குறித்து.. அமெரிக்கா அதிருப்தி!
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெனாசிர் புட்டோ. 2 முறை பிரதமராக இருந்தவர் பெனாசிர் பூட்டோ. இவருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் 2 முறையும் இவர் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பின்னர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது படுகொலை செய்யப்பட்டார்.
இப்படி பாகிஸ்தான் வரலாறு நெடுகிலும் ஏகப்படட்ட ரத்தக்களறிகள்தான் நிறைந்து காணப்படுகிறது. 2 பிரதமர்கள் கொல்லப்பட்டனர். ஒரு பிரதமரை தூக்கிலிட்டுக் கொன்றனர். ஜியா உல் ஹக், முஷாரப் என சர்வாதிகாரிகளையும் பார்த்த நாடு பாகிஸ்தான். ராணுவத்தின் ஆதரவு இல்லாமல் அங்கு எந்த ஆட்சியும் நடக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவே இருந்தாலும் கூட ராணுவத்தின் ஆதரவு இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் கூட யாராலும் அங்கு ஆட்சி நடத்த முடியாது.
இப்போது
இம்ரான் கான்
அரசுக்கும் கூட ராணுவத்தின் ஆதரவு இல்லை. ராணுவத்தை கிண்டலடித்து அவர் அதை பகைத்துக் கொண்டுள்ளார். அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை பறி போயுள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வேறு காத்திருக்கிறது. இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வது உறுதி என்றும் சொல்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பதட்டம் நிறைந்ததாகவே காட்சி தரும் பாகிஸ்தான் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.
அடுத்த செய்திபோனை எடுங்க.. புடினுடன் பேசுங்க.. போரை நிறுத்துங்க.. மோடிக்கு உக்ரைன் கோரிக்கை