Beast: மக்களை காப்பாற்ற போராடும் தளபதி.. 'பீஸ்ட்' சீக்ரெட்டை போட்டுடைத்த நெல்சன்..!


பீஸ்ட்
‘ படம் குறித்து வெளியாகும் அப்டேட்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
. ஏப்ரலில் ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

சன் பிக்சர்ஸ்
தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. தளபதி விஜய்யின் துள்ளலான நடனமும் அனிருத்தின் அசத்தலான இசையும் இணைந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல் இதுவரை யூட்யூப்பில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

‘வாடிவாசல்’ படத்துக்காக போட்டா போட்டி: குதுகலிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்..!

அதனை தொடர்ந்து அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நெல்சன், ‘பீஸ்ட்’ படம் குறித்தும், நடிகர் விஜய் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய முந்தைய படங்களை போல் ‘பீஸ்ட்’ படம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பன், காமெடியுடன் இந்தப்படத்தை இய்க்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு கஷடமான சூழ்நிலையை ஹீரோ எப்படி சமாளிக்கிறார். மக்களை எப்படி பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே ‘பீஸ்ட்’ படத்தின் கதை என தெரிவித்துள்ளார் நெல்சன். அவரின் இந்தப்பேட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்சனை விளாசும் விஜய் ரசிகர்கள் – என்ன காரணம் தெரியுமா?

அடுத்த செய்திசிம்புவுக்கு அது ரொம்ப அதிகம்.. பிரபல நடிகர் கருத்து..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.