Viral News: ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கடற்கரையில் ‘வேற்றுகிரக’ உயிரினம்…!!

ஆஸ்திரேலியாவில், கடற்கரையில் ஒருவர் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தை கண்டுள்ளார். 4 கால்கள் கொண்ட இந்த உயிரினம் அடையாளம் காணப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான அதன் படங்களைப் பார்த்து சிலர் ஏலியன் என்று கூறி வருகின்றனர். இந்த விசித்திரமான  உயிரினத்தை கடற்கரையில் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதை முதன்முறையாக பார்த்தவர் வீடியோ செய்து ஷேர் செய்துள்ளார்.

ஏலியன் போன்ற தோற்றம்

இந்த உயிரினத்தின் தோற்றம் வேற்றுகிரகவாசி போல் இருந்தது. எனவே, அதனை வேற்றுகிரகவாசி என்றும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரினத்தை முதன்முதலில் பார்த்த நபரின் பெயர் அலெக்ஸ் டான். அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய சன்ஷைன் கடற்கரையில் இந்த விசித்திரமான உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் அதனை பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்த உயிரினத்தை அடையாளம் காண மக்களிடம் உதவியும் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | Space Anaemia: விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாகும் ‘விண்வெளி ரத்த சோகை’!

வீங்கிய உடல், 4 கால்கள்

இந்த உயிரினம் 4 கால்களுடன் அதன் உடல் வீங்கிய நிலையில் காணப்படுகிறது. அதற்கு எலி போன்ற வால் உள்ளது. தலையில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து சதைகளும் காணாமல் போன நிலையில் மண்டை ஓடு மட்டுமே தெரியும். உடம்பில் ரோமம் கூட இல்லை. அலெக்ஸ், ‘நான் மிகவும் விசித்திரமான ஒன்றைக் கண்டுபிடித்தேன். இது வரை ஏலியன் என்று மக்கள் அழைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.’  என பதிவு செய்துள்ளார். 

சிலர் இதனை ஒரு இறந்த உயிரினத்தின் சடலம் என்றும்,  சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்க கூடும் எனவும் கூறுகின்றனர். ஏனெனில் அதன் உடல் முழுவதுமாக வீங்கி உள்ளது.

கடற்கரையில் காணப்படும் இறந்த உடல்கள், மண் மற்றும் உப்பு நீர் காரணமாக நிலை மாறுவதை நாம் காணலாம். பல நாட்கள் கழித்து, கடற்கரையில் கணப்படும் விலங்குகளின் சடலம் முற்றிலும் மாறுகிறது. அலைகள் மற்றும் உப்பு நீர் காரணமாக, அவை அரிக்கப்பட்டு வித்தியசமாக தோன்ற ஆரம்பிக்கின்றன. இதனால் அதனை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா? ரகசியமாக ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.