டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட் உத்தரவு ரத்து… விசாரணையை 12 வாரங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்துப் பேசினார். மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் … Read more

இன்னும் 2 வருஷம் தான், அப்புறம் பாருங்க., வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தியை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசுகையில்,  “பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும். இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே … Read more

`14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசிக்கும் முதியவர்!' – காரணத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி!

பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வீட்டாரின் மீது கோபித்துக்கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் தங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த வெய் ஜியாங்குவோ என்பவர் தன்னுடைய 40-வது வயதில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து … Read more

”14 கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேரம் ஒதுக்கி சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில் 14 கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் கொடுக்கப்பட்டது கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்த பிரதமர் ஆவண செய்வதாக கூறினார் இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவிட அனுமதிக்க கோரிக்கை கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும் மேகதாதூவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட … Read more

மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இல்லம் தேடி கல்வித் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மதுரை: தமிழக முதல்வரின் இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். மதுரை மண்டலத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , நிதி … Read more

நானும் வருவேன்: தனுஷை முன்னாடி விட்டு பின்னாடியே கிளம்பிய ஐஸ்வர்யா

தனுஷை பிரிந்த பிறகு தன் கெரியரில் படுபிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு ஓ சாத்தி சல் என்கிற இந்தி படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தான் ஐஸ்வர்யா இயக்கும் முதல் பாலிவுட் படமாகும். முதல் பட வேலையை துவங்கும் முன்பே ஐஸ்வர்யாவை தேடி இரண்டாவது இந்தி பட வாய்ப்பு வந்துவிட்டது. முசாபிர் வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோராவுக்காக தான் அந்த படத்தை இயக்கவிருக்கிறார். … Read more

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு (Photos)

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது. தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நுகேகொடவிலுள்ளவர்களும் மிரிஹான பகுதிக்கு செல்லப்போவதாக தெரிவித்த வண்ணமுள்ளனர். மிரிஹான – … Read more

மத்திய பிரதேசத்தில், இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

மத்திய பிரதேசத்தில் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரட்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷஹீன் (Shaheen) என்ற அந்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு 2 தலைகள் மற்றும் 3 கைகளுடன் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை காப்பாற்ற வாய்ப்புள்ளதால், இந்தூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த குழந்தை … Read more

லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட சென்னை! 211 ஓட்டங்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் … Read more

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் என பலரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. இன்று பிற்பகல் … Read more