7000 ரன்கள்… 200 கேட்ச்கள்… புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த தோனி!

MS Dhoni Tamil News: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த 7-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடியது. சென்னை அணியின் வீரர்கள் சிக்சர் மழை பொழிந்தனர். அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்கள் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

கொரோனா நான்காவது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்.!

கொரோனா தொற்றின் நன்காவது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிட்டிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை என்றும், பல்வேறு நாடுகளில் நோய் தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.  அதனால் பொதுமக்கள் கவனக்குறைவாக இல்லாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனா … Read more

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!" – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர். நாடாளுமன்றம் அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் … Read more

மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானங்கள்

மதுரை: நீதிபதி சச்சார் குழு பரிந்துரை மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினரின் நலன்களை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், “மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டவிதிகளை மதித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் (2016) அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு பொதுக்கட்டிடங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டவிதி அமலாகவில்லை. தொழில்நுட்பத்தை … Read more

பொருளாதார நெருக்கடி | மின் பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கிய இலங்கை தெருக்கள்

கொழும்பு: மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள 22 மில்லியன் மக்கள் தினமும் 13 மணிநேரம் மின்வெட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் இரவில் அணைக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை மின்சாரத்துறை அமைச்சர், பவித்ரா வன்னியராச்சி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மின்சாரத்தை சேமித்து உதவுவதற்காக நாடுமுழுவதும் உள்ள தெரு விளக்குகளை அணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவிலிருந்து 500மில்லியன் … Read more

என்னோட ஆட்டியூட் அவருக்கு பிடிச்சுப்போச்சு… இயக்குநர் பாலா குறித்து மனம் திறந்த நடிகை!

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரித்தி ஷெட்டி . தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில் நடித்து வருகிறார் கிரித்தி ஷெட்டி. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குநர் பாலா- நடிகர் சூர்யா கூட்டணியில் … Read more

கொலம்பியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியதை அடுத்து 21,000 பயணிகள் பாதிப்பு

  கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகினர். கொலம்பியாவின் நியோனெக்ரோ (Rionegro) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாத்தம் (Latam) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320-200 ரக விமானம் புறப்பட்டது. அப்போது, விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால், விமானம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே அவசரமாக திரும்பியுள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் பஜார்டோ (Fajardo) … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெற்றன கொரோனா காலக் கட்டுப்பாடுகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில்  ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இனிமேலும் நாடு முழுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டாமென முடிவு எடுத்துள்ளதாக கடந்த 23 ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு … Read more

மொத்தமும் ஏமாற்று வேலை: அம்பலமான வடகொரியாவின் ஏவுகணை சோதனை

உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது. Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை … Read more