செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கடைசி நாள்: பான்-ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

சென்னை: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இந்த பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே நேரத்தில் பலர் அதில் கவனம் செலுத்தவில்லை. இதையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை … Read more

அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு நாள் பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். அவர் அரசு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். இன்று இரவு பெங்களூருவில் தங்கும் அவர், நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெறும் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் 115-வது பிறந்தநாள் குரு வந்தனா விழாவில் கலந்து கொள்கிறார். … Read more

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திக்க தயார்- இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றம் திடீரென ஞாயிற்றுக் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு … Read more

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா?.. ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என  ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்க வேண்டாம்!: பெங்களூருவில் பஜ்ரங் தள் அமைப்பினர் துண்டு பிரச்சுரம் விநியோகம்..!!

பெங்களூரு: பெங்களூருவில் ஹலால் மாமிசத்தை இந்து மதத்தினர் வாங்க வேண்டாம் என்று பஜ்ரங் தள் அமைப்பினர் துண்டு பிரச்சுரம் விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களால் விற்பனை செய்யப்படும் ஹலால் மாமிசத்தை வாங்க வேண்டாம் என்று இந்து அமைப்புகள் சமீப காலமாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக பெங்களூருவில் நிலமங்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஹலால் மாமிசத்தை தவிர்ப்போம் என்று  துண்டு பிரச்சுரங்களை விநியோகித்தனர். இந்து கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வணிகம் … Read more

திருச்செந்தூர் முருகன் கோயில் – வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம் குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த … Read more

பீகாரில் டீசலில் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கத்தடை

பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை முதல் டீசலை எரிபொருளாகக் கொண்டு ஓடும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள், ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனது. இந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிப்பதாக அம்மாநிலத்தின் … Read more

வங்காள விரிகுடா பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக… முன்னுரிமை:பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி:”தற்போதுள்ள சர்வதேச சூழலில், நம் பிராந்திய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என, பிரதமர் மோடி, ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்க கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக, ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் ஐந்தாவது மாநாடு, இலங்கையில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, துவக்க உரையாற்றினார். அப்போது, அவர் … Read more

பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு : காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த முடிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இவ்வழக்கில் நடிகர் திலீப் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடித்துவிட கேரள … Read more