9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம்.. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய அரசு!

இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மிக மோசமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் – டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இதுவே கடந்த ஜூலை – செப்டம்பர் காலகட்டத்தில் 9.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன காரணம் இது … Read more

தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து, கௌரவ பிரதமர் தலைமையிலான கலந்துரையாடல்

தற்போதைய பொருளதார பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் நீண்ட கால பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பொருளாதார மறுமலர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு பொருளாதாரத் துறையில் நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு அறிவார்ந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதன்போது கருத்து தெரிவித்த நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க அவர்கள், மார்ச் … Read more

கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் நடிகர் அஜித் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Actor Ajith Blessing In Kerala Temple With Traditional Dress : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து 3-வது முறையாக இணையும இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக நடிகர்கள் பலரும் தங்களது படம் தொடர்பான அப்டே்களை வெளியிட … Read more

உத்தரவை நிறைவேற்றாத 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலா இரண்டு வாரங்கள் சிறை., அதிரடி தீர்ப்பு.!

ஆந்திர மாநிலம் : அரசு பள்ளிகளில் உள்ள கிராம மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற வேண்டும் என்று, அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.  உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்ற தவறியதால் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலா இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வாசஹங்கி உத்தரவிட்டது.  அப்போது, அந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் … Read more

சென்னை: ப்ளஸ் டூ மாணவியைக் காதலிக்கக் கட்டாயப்படுத்திய இளைஞர் கைது!

சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த முகேஷ், தன்னுடைய நண்பன் சையத் மசூத்தை அழைத்துக் கொண்டு பைக்கில் மாணவியைச் சந்திக்கச் சென்றார். வேளச்சேரி பகுதியில் மாணவி தனியாக நிற்பதை முகேஷ் பார்த்தார். உடனே அங்குச் சென்ற அவர், மாணவியிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய், … Read more

அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா.. மகளின் கற்பை விற்ற தாய்.. பர்னிச்சர் கடை பார்ட்டிக்கு ஜெயில்..!

கன்னியாகுமரியில் 11ஆம் வகுப்பு மாணவியை மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரனும், அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் கற்பை விற்க துணிந்த தாயிடம் இருந்து தோழியின் துணிகர செயலால் மாணவி காப்பாற்றப்பட்ட கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு… கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது … Read more

மார்ச் 31: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,825 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.30 வரை மார்ச்.31 மார்ச்.30 … Read more

மாஸ்கை கழட்டும் மகாராஷ்ரா: முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சனிக்கிழமை முதல் அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெரும்பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிராவில் கோவிட் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட இருக்கும் நிலையில் முகக்கவசம் அணிதல் அறிவுறுத்தப்படும், ஆனால் கட்டாயாம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் புத்தாண்டு குடிபத்வாவை (மராத்தி புத்தாண்டு) கொண்டு வருவதால், மகாராஷ்ட்ராவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் … Read more

தீர்ப்பை செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கிராம மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற வேண்டும் என அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதாக, சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலா இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து ஆந்திர … Read more

இன்னொரு தேசிய விருது கன்பார்ம்: மீண்டும் இணையும் 'சூப்பர் டீலக்ஸ்' கூட்டணி..!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் , யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். சன் … Read more