முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள பகுதி! சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு: கடும் பதற்ற நிலை (Live)

களத்தில் விசேட  அதிரடிப்படையினர்! துண்டிக்கப்பட்ட இணைய இணைப்புக்கள்..  கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் சற்றுமுன்னர் விசேட அதிரடிப்படையினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர்.  இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது பொலிஸ் தடுப்புச்சுவர் தகர்த்தெறியப்பட்டது..  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் … Read more

இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்..!

இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் அதிபர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் கூட்டம் அதிபர் இல்லம் முன் போலீசார் குவிப்பு – பலத்த பாதுகாப்பு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது இலங்கை அரசு அதிபர் மாளிகையை முற்றுகையிட மக்கள் திரண்டதால் பதற்றம் Source link

மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை மொத்தமாக சிதைத்து, பதுங்கியிருந்த 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட காரணமான ரஷ்ய தளபதி மீது பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவின் கொடூர தளபதிகளில் ஒருவரான Mikhail Mizintsev மீது பிரித்தானிய அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள நாடக அரங்கம் ஒன்றில், ரஷ்ய குண்டுவீச்சுக்கு பயந்து பதுங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் Mikhail Mizintsev. குறித்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் … Read more

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் 1.35 லட்சம் அபராதமாக வசூல் … Read more

போக்குவரத்து விதிகளை மீறிய உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள்- சென்னையில் ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகரில் ஏராளமான மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோக சேவைகள் (ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை) செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை பிரபலமாக அதிகரித்து வருவதுடன்,  உணவு விநியோக பணியாளர்களின் எண்ணிக்கை  ஒருங்கிணைப்பாளர்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இந்த மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோகச் சேவைகளில் பெரும்பாலானவை மிகக் குறுகிய நேரத்தில் உணவை வழங்குவதாக உறுதியளிக்கின்றன, இது உணவை விநியோகம் செய்பவர்கள் விரைவாக வாகனம் … Read more

இந்தியாவில் தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு- புதிதாக 1,225 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,225 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 28-ந் தேதி பாதிப்பு 1,270 ஆக இருந்தது. மறுநாள் 1,259, நேற்று 1,233 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் … Read more

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாகாலாந்து, அசாம், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமித்ஷா கூறியுள்ளார். 

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கியது.! அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித ேசவை டிக்கெட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம்தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் முன்பதிவு இன்று காலை 11 மணி முதல் மீண்டும் தொடங்கியது. திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலக கவுன்டரில் … Read more

சென்னை: சாலை விதிகளை மீறிய உணவு விநியோக பணியாளர்கள்; ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னையில் ஒரே நாளில் சாலை விதிமுறைகளை மீறியதாக, உணவு விநியோக சேவை நிறுவன பணியாளர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட மொபைல் ஆப் அடிப்படையிலான ஏராளமான உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகக் குறுகிய நேரத்தில் உணவை விநியோகிப்பதாக இந்த நிறுவனங்கள் உறுதி அளிக்கும் நிலையில், உணவை கொண்டு செல்லும் ஊழியர்கள் அதிவேகமாக செல்லுதல், சிக்னல்களை மீறுதல் உள்ளிட்ட சாலை விதிமுறைகளை மீறி வருகின்றனர். விதிமீறல்களை … Read more

தொலைந்த பையை கண்டுபிடிக்க இண்டிகோ ஏர்லைன்ஸின் வலைதளத்தையே ஹேக்செய்த நபர்

மும்பையில் விமான பயணி ஒருவர், தான் தொலைத்த பையை கண்டுபிடிப்பதற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தையே ஹேக் செய்துள்ளார். நந்தகுமார் என்ற மென்பொறியாளர் பாட்னாவில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணித்துள்ளார். வீடு திரும்பிய பிறகே, அவரது உடைமை மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், எந்த பயனும் இல்லாததால், இண்டிகோ நிறுவனத்தின் வலைதளத்தை தனது நிரல் அறிவு மூலம் அவர் ஊடுருவி உள்ளார். பின்னர் குறிப்பிட்ட பயணியை தொடர்பு … Read more