நாளை மீண்டும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை

மாஸ்கோ நாளை மீண்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக ரஷ்யச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைவரும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வர வேண்டும் என மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.   சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தப்பட்டது.  இதற்கு ரஷ்யா ஒப்புதல் தெரிவித்தது இதையொட்டி பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது.  இந்த … Read more

தமிழகத்தில் புதிதாக 348 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நேற்றைய பாதிப்பு 366 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட … Read more

நியமனம் செய்யப்பட்ட 2 வாரத்தில் பதவியை நிராகரித்த ஏர் இந்தியா சிஇஓ

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சி என்பவரை டாடா குழுமம் நியமனம் செய்தது. துருக்கியைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், துருக்கி அதிபர் ஏர்டோகானின் முன்னாள் ஆலோசகரும் ஆவார். டாடா குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சியை நியமனம் செய்து அறிவித்தது. இவர் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிஇஓ பொறுப்பு ஏற்க இருந்தார். ஆனால் வெளிநாட்டைச் … Read more

உக்ரைன்- ரஷியா இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

உக்ரைன்-  ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.  உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்

ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேசினார். உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் விவகாரம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் அதனை கண்காணித்து வருகிறார். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரைன் ஒரு பெரிய நாடு. உக்ரைனின் மேற்கு பகுதியில் யுத்தம் அதிக அளவில் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரிய அளவில் … Read more

”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்

இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ” வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது … Read more

நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணையும் வடிவேலு?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி – வடிவேலு கூட்டணி என்றாலே அனைவருக்கும் ‘சந்திரமுகி’தான் நினைவுக்கு வரும். வடிவேலுவுக்கு காமெடிக் காட்சிகளில் டஃப் ஃபைட் கொடுத்திருப்பார் ரஜினி. சந்திரமுகியின் வெற்றிக்கு அதன் கதை ஒரு காரணமாக இருந்தாலும் வடிவேலு – ரஜினி காமெடி காம்போவும் பலமாக இருந்தது. இதேகூட்டணி மீண்டும் வாசு இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் இணைந்திருந்தனர். திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் … Read more

எம்.பி.,க்களுக்கு வெளியுறவு அமைச்சர் கடிதம்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பல எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு உதவி கோரும் நிலையில், அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை துவக்கி உள்ள மத்திய அரசு, இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், எம்.பி.,க்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய … Read more