இந்திய மாணவர் பலி எதிரொலி: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் கார்கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்கிற மாணவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைப்பெற உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையும் படியுங்கள்.. உணவு பொருட்கள் வாங்க கடையில் … Read more

நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, ‘‘நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க பிரிட்டன் அரசு தயார்: போரிஸ் ஜான்சன்

போலந்து: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க பிரிட்டன் அரசு தயாராக உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். போலந்தில் செய்தியாளர் சந்திப்பின்  போது  பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்தார். 

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்: பெற்றோரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி: உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார். உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர … Read more

TET தேர்வில் வென்ற ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் மறுநியமனத் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் TET தேர்வுக்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டத்தின் போது இரண்டு பெண்கள் மயங்கிவிழுந்தது போராட்டக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

உக்ரைனிலிருந்து கேரளா திரும்பிய 36 மாணவர்கள்

கேரளாவைச் சேர்ந்த 36 மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நேற்று (திங்கட்கிழமை) மாலை உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்த 36 மாணவர்களில் 25 பேர் கொச்சிக்கும், 11 பேர் திருவனந்தபுரத்திற்கும் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கிவ்வை விட்டு உடனே வெளியேறுமாறும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் இன்று கிவ்வை விட்டு வெளியேறுமாறும் இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையும் … Read more

ஆர்.கண்ணன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், மிர்ச்சி சிவா நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்டப் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ஆர்.கண்ணன் அடுத்ததாக நடிகை ஹன்சிகா மோத்வானியை வைத்து ஃபேண்டஸி ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகா இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ஈசிஆரில் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் — ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலத்தின் முக்கிய சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் சமூகவலைதளம் மூலம் வாழ்த்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர், மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், “மனதிற்குகந்த … Read more

எங்களை யாராலும் வீழ்த்த முடியாது: உக்ரைன் அதிபர்| Dinamalar

கீவ்: உக்ரைனை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் எனவும் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பிய பார்லிமென்டில் உரையாற்றியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்று காலையிலிருந்தே தீவிரப்படுத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ஏவுகணை தாக்குதலிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. குடியிருப்பு பகுதியிலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய … Read more