உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. !

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், இன்று ஆறாவது நாளாக உச்சத்தினை எட்டியுள்ளது. பெலராஸில் நடந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும், பதற்றமான நிலையே இன்னும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தரையில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் என மும்முனைகளிலும் படைகள் தயாராக இருப்பதாக தகவல்க வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் மத்தியில் தான் உக்ரைனில் கீவ் நகரில் உள்ள இந்தியர்களை எந்த … Read more

உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?

ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது.  தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின் படி, தங்கள் நாட்டு முக்கிய கட்டுமானங்களையும் மக்களையும் தாக்க, ரஷ்யா வேக்குவம் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் திங்களன்று இதை தெரிவித்தார்.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், நடந்து வரும் மோதலில் ரஷ்யா வேக்குவம் வெடிகுண்டு … Read more

அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

High court order to police to provide security to ADMK councillors: மதுரை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் … Read more

குடும்பத்தினர் கண் முன்னே தந்தை மகனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்..!

குடும்பத்தினர் கண்முன்னே  தந்தை மகன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் நாகூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  அவரும் அவரது மகன் முகம்மது எனும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி … Read more

“எங்கள் இலக்கை அடையும் வரை உக்ரைன் மீதான போர் தொடரும்" – ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா- உக்ரைன் போரில் நடுநிலையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தநிலையில், “உக்ரைன் மீதான … Read more

ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு <!– ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசார… –>

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால், ஜெயக்குமார் மனு வியாழக்கிழமை பட்டியலிடப்படும் – நீதிபதி ஜெகதீஷ் சந்திரா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு Source link

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மணற்சிற்பம் வடித்து நெல்லூர் கலைஞர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மணற்சிற்பம் அமைத்து, நெல்லூர் மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முருகன், … Read more

‘‘எனக்கு வேண்டாம் இந்த பதவி’’- ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி இல்கர் ஐசி திடீர் மறுப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இல்கர் ஐசி, திடீரென அந்த பதவி வேண்டாம் என மறுத்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் … Read more

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளவின் 26 வயது மகன் மறைவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளவின் மகன் ஜைன் நாதெள்ள மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26. சிரிபல் பால்சி என்னும் (மூளைச் சேதம், கை கால் முடக்கம்) நோயால் பாதிக்கப்பட்ட ஜைன் நேற்று உயிரிழந்தார்.இந்தத் துக்கச் செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தனது ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளது. அதில், ”சத்யா நாதெள்ள குடும்பத்தோடு துக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். அதேசமயம் நாதெள்ள குடும்பம் தங்கள் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை செலவிட அனுமதியுங்கள்” … Read more

உக்ரைன் போரில் இந்திய மாணவர் பலி: ராகுல் காந்தி வேதனை!

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்து உள்ளார். உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் கடந்த ஆறு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்யப் படைகள், அரசு கட்டடங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை நோக்கி குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு தங்களால் முடிந்தவரை உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் கொடுத்து வருகின்றன. … Read more