ப்பா… பார்க்கும் போதே பயந்து வருது.. மிரட்டும் ஆதி.. “தி வாரியர்” ஃபர்ஸ்ட் லுக் அவுட் !

நடிகர் ராம் பொதியேனி நடிக்கும் “தி வாரியர்” ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாகும். இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ள அதுக்கு பிளான் போட்ட விக்கி- நயன்? தீயாய் பரவும் தகவல்! இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கின்றார். இன்று, மகா சிவராத்திரி … Read more

சமகால உலக சந்தை தொடர்பில் ரணிலின் ஆரூடம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கணித்துள்ளார். எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்ட்களால் அதிகரிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் என கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசாங்கத்தின் … Read more

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் <!– உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாட… –>

கார்கிவ் நகரில் தாக்குதல் – இந்திய மாணவர் உயிரிழப்பு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தின கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் எனத் தகவல் விடுதியில் இருந்து ரயில் நிலையம் சென்றபோது விபரீதம் இன்று காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலில் பலி உக்ரைனின் 2ஆவது … Read more

மகாசிவராத்திரி கோலாகலம் : சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் <!– மகாசிவராத்திரி கோலாகலம் : சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள்… –>

மகாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டுச் சென்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷம்பு மகாதேவ் கோவிலில் மகா சிவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளேஷ்வர் கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல, உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் மூன்று நதிகள் சங்கமிக்கும் … Read more

உக்ரைன்- ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு? தனது நிலைப்பாட்டை அறிவித்தது ஈரான்

 மத்திய கிழக்கு நாடான ஈரான், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியதாவது, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளில் இருந்து தான் உக்ரைன் நெருக்கடி உருவானது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு மூலம் அமெரிக்கா உக்ரைனை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. உக்ரைன் அமெரிக்காவின் கொள்கையால் பாதிக்கப்பட்டது. … Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர்கள் – வீடியோ

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/ukrina-tamll-video01-03-2021.mp4 உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்-ல் … Read more

உக்ரைன் – ரஷிய போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. ரஷிய ராணுவம் கார்கீவ் நகரில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மக்கள் போரில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய … Read more

ஆரோக்கிய வனத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது. மேலும், ஆரோக்கிய வனத்தில் நீருற்றுகள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் மற்றும் காணும் இடம் உள்ளிட்டவையும் … Read more

கட்டிடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களிட்டு ரஷிய ராணுவம் தாக்குதல்?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷியா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது. உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷிய ராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் தாக்குதல் … Read more

கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை குளத்தில் புதைந்துள்ளது: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதில் இருந்த மயில்சிலை குளத்தில் புதைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குளத்தை தோண்டாமல் சிலையை கண்டறிய அண்ணா பல்கலைக்கழக உதவியை கோரியுள்ளோம். அலகில் பூவுடன் உள்ள சிலை இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் ஏதுமில்லை. பாம்புடன் கூடிய மயில் சிலைக்கு பதிலாக பூவுடன் கூடிய மயில் சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குளத்தில் புதைந்துள்ள மயில் சிலையை … Read more