உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.: வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் இறந்துள்ளார். கார்கிவ் நகரிலிருந்து வெளியே ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டுவீச்சு தாக்குதலில் மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு ரயில்வே ரயில்கள்: திடீர் சோதனையின்போது கோடிகளில் வசூலான அபராதத்தொகை

மதுரை கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ. 7.79 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இதில், மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனை நடத்துகையில், கடந்த  2021 ஏப்ரல் மாதம் … Read more

மகா சிவராத்திரி: 6 மணி நேரத்தில் 23436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை வடித்த சிற்பி

ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று (01/03/2022) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.  View this post on Instagram A post shared by Sudarsan pattnaik … Read more

மீட்பு பணியில் இந்திய விமானப்படை: பிரதமர் அறிவுறுத்தல்!| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும் உதவி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது வரை, இதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் 8 விமானங்களில் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். … Read more

சாய்பல்லவிக்கு லேடி பவன் கல்யாண் பட்டம் சூட்டிய சுகுமார்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான சாய்பல்லவி அதன்பிறகு மலையாளம், தமிழ் படங்களில் நடித்தாலும், தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். சரியான படங்களை தேர்வு செய்து நடித்துவரும் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டமும் தெலுங்கு திரையுலகில் உருவாகியுள்ளது. அது எந்த அளவிற்கு என்பதை நேற்று நடைபெற்ற ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக காண முடிந்தது. கிஷோர் திருமலா இயக்கத்தில் சர்வானந்த், ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள … Read more

ஆஸி.,யில் கனமழை கொட்டுது; வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி| Dinamalar

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் பெய்துவரும் கனமழையால், கிழக்கு கடற்கரை பகுதியான பிரிஸ்பேன் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில், கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து, 50 வயது … Read more

டாடா-வின் ஆஃபரை தூக்கி எறிந்த இல்கர் ஆய்சி.. மோடி அரசு தான் காரணமா..?! #AirIndia

மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் கைப்பற்றிய ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இன்னும் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படாமல் இயங்கி வருகிறது. பல மாதங்களாகக் கடுமையான திட்டமிடல், ஆலோசனைக்குப் பின்பு துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி-ஐ நியமிக்கச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் நிர்வாகம் பிப்ரவரி 14ஆம் தேதி முடிவும் செய்தது. இல்கர் ஆய்சி நியமனத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்ட … Read more

இன்று 69வது பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின்.. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன் முறையாக தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு காலை மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தை கருணாநிதி, அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து … Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மேலாளர், ஆய்வக உதவியாளர், வணிக தொடர்பு அலுவலர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக்,பி.எஸ்சி, எம்பிஏ, எம்.காம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக விருதுநகர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் … Read more