உக்ரைன் விவகாரம்; ஜனாதிபதி உடன் பிரதமர் மோடி சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் 3 முறை ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு (பிப்.,28) வரை உக்ரைனில் இருந்து 5 விமானங்கள் மூலமாக 1,156 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்களை அனுப்பி, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க … Read more

அரசின் கெடுபிடியால் 10 கோடியை இழந்த பீம்லா நாயக்

பவன் கல்யாண், ராணா நடிப்பில் கடந்த வெள்ளியன்று பீம்லா நாயக் திரைப்படம் வெளியானது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. சாஹர் சந்திரா இயக்கிய இந்தப்படத்திற்கு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்தப்படம் ஆந்திராவில் முதல் நாள் வசூலாக 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் … Read more

கீவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை| Dinamalar

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான நமது தூதரகம் அறிவறுத்தி உள்ளது. உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், அவ்வபோது, … Read more

NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

என்எஸ்ஈ அமைப்பில் பல முறைகேடுகளைச் செய்துள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை செபி, வருமான வரித் துறை, சிபிஐ என அரசு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தனது சென்னை வீட்டை ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? என்எஸ்ஈ சித்ரா வழக்கு இந்தியாவிலேயே மிக முக்கிய வழக்காகப் … Read more

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் ஜைன் நாதெல்லா காலமானார்

மைக்ரோசாப்ட் தலைமை  செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லாவின் (Satya Nadella) மகன் ஜைன் நாதெல்லா (Zain Nadella) திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 26. அறிக்கைகளின்படி, ஜெயின் பெருமூளை வாதம் என்னும் இந்த குறைபாடு  இருந்தது. பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படும் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோயினால் பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது. சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜெயின் இறந்துவிட்ட தக்வல் குறிப்பிடப்பட்டுள்ளது. ” இறந்தவரது குடும்பத்தை மன … Read more

யூடியூப்பில் ‘இந்து தீவிரவாதி’ என பேட்டியளித்தவர் கைது – சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று, சென்னை மாநகராட்சி தேர்தலில் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா ஆனந்தன் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டது. அப்போது ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்பவர், ‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்பதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டு தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து” … Read more

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான  மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத்  திட்டங்கள்  முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும்  தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு … Read more

"விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!"- `பவானி' விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். “என் படங்கள் குறித்து மீம்ஸ் போட்டு தேவையில்லாத நாடகம் ஆக்கிவிட்டார்கள்!”- விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நாம் நடிக்கவேண்டும் என்ற … Read more

தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் <!– தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் –>

ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் சென்னை ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் சென்னை தவிர்த்த மற்ற இடங்களிலும் ரேசன் நேரம் மாற்றம் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டு அறிவிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இயங்கும் பிற்பகலில் 3 மணி முதல், இரவு 7 மணி வரையில் ரேசன் கடைகள் இயங்கும் – தமிழ்நாடு அரசு சென்னை தவிர்த்து இதரப் … Read more

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்  டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா?- ராமதாஸ் கேள்வி

சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதல் நிலைத் தேர்வுகளில் கேட்கப்பட்ட தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட, அதை மதித்து செயல்படுத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மறுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையை … Read more