தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி இல்லை: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் … Read more

கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் ரஷ்யா: தவிக்கும் இந்திய மாணவர்கள்; மத்திய அரசு கவலை

கீவ்: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு இந்திய மாணவர்கள் 2,500 பேர் சிக்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் … Read more

அங்கே "டமால் டுமீல்".. இங்கே "டும் டும் டும்".. உக்ரைன் பெண்ணை மணந்த ஹைதராபாத் பையன்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் அனல் பறக்க யுத்தம் நடந்து கொண்டுள்ள நிலையில், அந்த நாட்டுப் பெண்ணை மணம் முடித்து கையோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை. பல காதல்களால் போர்கள் மூண்டதையும் வரலாறு பார்த்துள்ளது. பல போர்களை காதல் நிறுத்தியதையும் பார்த்துள்ளது. அன்பை விட பெரிய ஆயுதம் ஏதேனும் இருக்க முடியுமா.. அப்படிப்பட்ட அன்பின் அடித்தளத்துடன் உருவான ஒரு இரு நாட்டு காதல் திருமணமாக சுப முடிவைக் கண்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான திருமணம். வழக்கமான … Read more

கீவ் நகரில் "வெயிட்டிங் மோட்".. வட மேற்கில் அதிரடி.. தெற்கே தெறி வேகம்.. திணறும் உக்ரைன்

உக்ரைன் நாட்டு மீதான போரை ரஷ்யா குறைப்பதாக தெரியவில்லை. ஆங்காங்கே சற்று நிதானம் காப்பது போல தெரிந்தாலும் திட்டமிட்டு உக்ரைன் சுற்றி வளைத்து அபகரித்துக் கொண்டிருக்கிறது ரஷ்ய ராணுவம் . மிக மிக தெளிவாக திட்டம் போட்டு படு சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறது ரஷ்யா. உலக நாடுகளின் கண்டனங்களும், பொருளாதார தடைகளும், மிரட்டல்களும், கோரிக்கைகளும் அதன் காதில் விழவில்லை. மாறாக தனது திட்டத்தை மிக நேர்த்தியாக அது செயல்படுத்தி வருகிறது. தற்போது சில பகுதிகளில் ரஷ்யா … Read more

பல நாட்கள் கழித்து ரஜினி செய்துள்ள விஷயம்..! இது எதிர்பார்த்தது தானே ?

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய நடிகர்களுள் ஒருவர் ரஜினி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் 169 ஆவது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் ரஜினியின் கடைசி சில படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதாலும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் … Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட வழிகாட்டல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதேவேளை கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறுகையில், பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.  அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு <!– ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல் செயலிகளை Windows App Store-ல் இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. Facebook மற்றும் Youtube தொடர்ந்து Google நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது. Source link

இந்தியாவில் புதிதாக 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 6,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், புதிதாக 6 ஆயிரத்து 915 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது நாடு முழுவதும் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. Source link

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளை எச்சரித்துள்ள புடின்!

உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு என புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது. இதனிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்து. பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது பொதுவான உடன்படிக்கை எட்டக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய குழுவின் தலைவர் … Read more

அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக வாதாடும் தமிழ் நடிகை

2021 ம் ஆண்டு வெளியான காதம்பரி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் பாட்டு படித்து வந்த போது மாடலிங் மற்றும் திரைத் துறையில் கால்பதித்தார். பின்னர், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அகிலா நாராயணன் பல மாத கடின பயிற்சிக்குப் பின் வெற்றிகரமாக பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்திருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருக்கும் முதல் தமிழ் … Read more