சேலம் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து – ஊழியர் செயலால் பரபரப்பு
சேலம்: சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன். பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் காயமடைந்த நீதிபதியை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தொடர்பாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.