பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு| Dinamalar

லீவ் : ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது. அதையடுத்து, லீவ் நகரில் உள்ள ‘பீர்’ தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது.காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கனடாவின் அதிரடி முடிவு.. உலக நாடுகளுக்கும் பாதிப்பா?

உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது பேச்சு வார்த்தைக்கும் மத்தியிலும் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இது இன்னும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றன. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை, ஸ்விப்ட் … Read more

Russia Ukraine Crisis: ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா – உக்ரைன் புகார்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யாவின் அடாவடி தாக்குதல் பற்றி குற்றம் சாட்டுகிறார். மேலும், மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யாவின் மீது மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. . திங்களன்று உக்ரேனியர்களை வெடிபொருட்கள் மற்றும் வேக்குவம் குண்டுகளால் தாக்கியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்று சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் (Amnesty International and Human … Read more

Russia Ukraine Crisis Live: ரஷ்ய படைகளை எதிர்க்க விரும்பும் வெளிநாட்டவர்கள் உக்ரைன் வரலாம்.. அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு!

Go to Live Updates Ukraine News: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 182 இந்தியர்களுடன், ருமேனியாவில் இருந்து புறப்பட்ட 7வது சிறப்பு விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது. அதேபோல், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன்’ ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. மேலும், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம், ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஏற்கனவே … Read more

தேர்தல் தோல்வியால் மாற்று கட்சிக்கு தாவும் ஈனப்பிறவி நான் அல்ல – மநீம சு.ஆ.பொன்னுசாமி பரபரப்பு அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தலைவரான சு.ஆ.பொன்னுசாமி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நட்புகளுக்கும், மய்ய உறவுகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் வணக்கம். நேற்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட செய்தியை அனைவரும் நன்கறிவீர்கள். இந்நிலையில் கட்சியின் உள்சுற்றறிக்கையாக அனுப்பப்பட்ட அந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்ததால் இந்த விளக்கத்தை … Read more

விருத்தகிரீஸ்வரர் கோயில்: கும்பாபிஷேகம் முடிந்து 22 நாள்களில் திருடு போன கோபுரக் கலசங்கள்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு கோயில் … Read more

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் <!– தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் –>

“தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்? தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அந்தமான் கடற்கரை அருகே வளிமண்டல சுழற்சி – இந்திய … Read more

ரூ.5 கோடி தொழிற்சாலையை அபகரித்ததாக புகார் – ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்தநரேஷ் என்பவரை தாக்கி, சட்டையை கழற்ற வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவிவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து,ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அன்று இரவு ஜார்ஜ் டவுன்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட … Read more

மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைன் செல்வது ஏன்? – தீர்வு குறித்து கல்வியாளர்கள் கருத்து

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போரில் ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ படிப்புக்காகச் சென்றவர்கள். உக்ரைன் கல்வித்துறை கணக்கின்படி, 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு படிப்பதாகக் கூறப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் படிக்கும் மாணவர்களில் 24 சதவீதம் பேர்இந்திய மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், டில்லி, ஹரியாணா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் மட்டுமல்ல… – நடுநிலைமைக்கு மறுபெயர் இந்தியா!

கடந்த 20-ம் நூற்றாண்டில் வியட்நாம், லாவோஸ், கியூபா, லெபனான், லிபியா, பனாமா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 21-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக்கை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் எந்தவொரு நாட்டிலும் அமைதி நிலைநாட்டப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு நேர்மாறாக இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் தலைதூக்கி உள்ளனர். கடந்த 1962-ல் கியூபாவில் ரஷ்ய … Read more