ஆப்பரேஷன் கங்கா: டெல்லி புறப்பட்டது 9ஆவது விமானம்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. … Read more