பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி
சென்னை: உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி எடுக்கும் முயற்ச்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்தார். உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாயகம் அழைத்து வர 24 மணி நேரமும் மத்திய அரசு உழைத்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு நான்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை எளிதாக்குவார்கள் என்பது மத்திய தலைமையின் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது எனவும் கூறினார்.