மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று  உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டிபடி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் … Read more

Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னையால் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பிரச்னையால் மிகுந்த அவதிப்பட்டேன். பிரசவத்துக்குப் பிறகும் அது தொடர்கிறது. இப்படியே தொடர்ந்தால் கர்ப்பப்பை இறக்கத்தில் கொண்டுபோய் விடும் என்கிறார்கள். உண்மையா? இதை எப்படித் தவிர்ப்பது? – சித்ரா (விகடன் இணையத்திலிருந்து) டாக்டர் கார்த்திகா பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா. “மலச்சிக்கல் பிரச்னை உள்ள பல பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கிவிடுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்போது முக்கி, மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்க … Read more

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது <!– 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது –>

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூமாபட்டியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார் இது தொடர்பாக ராமராஜின் உறவினரான கண்ணன் என்பவரிடம் விசாரணை செய்து அவரது செல்போனையும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி … Read more

எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை: `உங்களில் ஒருவன்` நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ தன்வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' செயல்படுவது எப்படி? – ஒரு பார்வை

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர். உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு … Read more

ஐ.நா. பொதுச்சபையின் அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? – இந்தியா விளக்கம்

ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை. முன்னதாக, அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபை சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. வாக்கெடுப்பை புறக்கணிப்பது … Read more

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விருப்பம்!

உக்ரைன் மீது ரஷ்யா 6ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தற்போது, சில உதவிகளை மட்டுமே உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இதனால், தனியாக தாங்கள் போராடி வருவதாக உக்ரைன் … Read more

விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தனர். இந்த செய்திதான் தற்போதுவரை பேசும்பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவிற்கு பலரிடமிருந்து பல காரணங்கள் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை மிகவும் பாதித்துள்ளது. இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். யுவனிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்..இதுவரை யுவன் வெளியில் … Read more

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு! மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான … Read more

உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு <!– உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு –>

உக்ரைன் மீது ரஷ்யா 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அங்கு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில்  நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த அங்காடியில் மக்கள் வாங்குவதற்கு தேவையான எந்த உணவுப்பொருளும் இல்லாத நிலை காணப்படுகிறது. மருந்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நீண்டு காணப்படுகிறது. வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடியே கிடப்பதாக … Read more