மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது <!– மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்… –>

மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தேர்தலில் 173 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில கவர்னர் இல.கணேசன் Tamphasana பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது … Read more

ரூ.20,000-க்கு புதிய ஆப்பிள் iPhone! கசிந்த தகவல்

Apple நிறுவனம் இந்திய பணமதிப்பில் ரூ.20,000க்கு குறைவான விலையில் iPhone அறிமுகம் செய்ய உள்ளதாக் அத்தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள iPhone SE 2022 அல்லது iPhone SE 3 என்ற புதிய மாடலின் விலை குறித்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் மார்ச் 8-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐஃபோனின் விலை 200 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று Apple நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

டில்லி இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை அறிவிக்கின்றன.  இந்த விலை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.105 … Read more

உகான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியது: ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி : சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹூனான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹூனான் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு … Read more

புகாரெஸ்டில் இருந்து 218 இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்டது 9-வது விமானம்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் … Read more

உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷிய ராணுவத்தின் … Read more

தனது 69வது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: தனது 69வது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்களில் அமைச்சர்களுடன் சென்று முதல்வர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் ஆபரேஷன் கங்காவின் 8 மற்றும் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது

ஹெங்கேரி: ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

உக்ரைனில் இருந்து மேலும் 21 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்

உக்ரைனில் இருந்து மேலும் 21 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து 250 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நேற்று மாலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில், 21பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆவர். சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்திறங்கிய மாணவர்கள் முக்கிய நகரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் … Read more

அஜித்தின் 'வலிமை' திரைப்பட இயக்குநர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்: என்ன காரணம்?

வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more