Month: March 2022
70 வயது முதியவர் டிரைவிங் பயிற்சி; கார் மோதி மூதாட்டி பலி; இருவர் காயம்| Dinamalar
காரைக்கால் : காரைக்காலில் முதியவர் டிரைவிங் பயிற்சியில் ஈடுபட்டபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்; மேலும் இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.காரைக்கால், திருநள்ளாறு செல்லூர் அகலங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் முருகையன் (70); விவசாயி. இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான ஹூண்டாய் காரில் டிரைவிங் பயிற்சியில் ஈடுபட்டார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக சென்ற அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (76), புனிதா (35), முத்துலட்சுமி (46) ஆகிய மூவர் மீது மோதியது.இதில் பலத்த … Read more
கருப்பு உடையில் கண்ணம்மாவின் அசத்தல் போட்டோஸ்
விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். தனிப்பட்ட காரணங்களுக்காக சமீபத்தில் 'பாரதி கண்ணம்மா' தொடரை விட்டு வெளியேறினார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது போட்டோஷூட்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், கருப்பு நிற ஆடையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சில புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 'பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இவர் தவறவிட்ட பொன்னான பட … Read more
ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கப்பல், கார்களுக்குத் தடை; பிரான்ஸ் அதிரடி உத்தரவு| Dinamalar
பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போரத் தொடர்ந்து ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கப்பல், கார்களுக்குத் தடைவிதித்து பிரான்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா மோதல் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடன் உலக நாடுகள் யாரும் நேரடியாக மோத முடியாத சூழலில் பல்வேறு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரஷ்ய அரசியல் தலைவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. கனடா உள்ளிட்ட … Read more
கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 283 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 6 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் … Read more
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'
கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் … Read more
போதும்..! போரால் உயிரிழப்பது பொதுமக்கள் தான் – ஐ.நா.பொதுச்செயலாளர் ரஷியாவிற்கு கண்டனம்
ஜெனீவா, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்பு அவசர 11-வது கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியாவின் தாக்குதல்களை கண்டித்து பேசினார். அவர் பேசியதாவது, “போதும் – … Read more
டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% மட்டுமே.. ஒமிக்ரான் எதிரொலி..!
இன்று பங்குச்சந்தை வர்த்தகர்கள் அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கியமான டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் வெளியாகியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே டிசம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி அளவு சரிந்துள்ளது, ஆனால் கணிக்கப்பட்ட அளவை விடவும் குறைந்துள்ளது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவு.. ஏன் தெரியுமா..?! டிசம்பர் காலாண்டு மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட முதல் கணிப்பில் 2022ஆம் நிதியாண்டின் செப்டம்பர் … Read more
இன்றைய (28.02.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Rasi Palan 01st March 2022: இன்றைய ராசிபலன்
Rasi Palan 01st March 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 01st March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 01ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) … Read more