திடீரென மத்திய அமைச்சருக்கு போன் போட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று (28-2-2022 ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.                     … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 1 முதல் மார்ச் 6 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

உக்கிரமடைந்த உக்ரைன் போர்.. தவிக்கும் தமிழக மாணவர்கள்.. கலக்கத்தில் பெற்றோர் ! <!– உக்கிரமடைந்த உக்ரைன் போர்.. தவிக்கும் தமிழக மாணவர்கள்.. க… –>

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனிலும் அதன் எல்லைப் பகுதியிலும் அண்டை நாடுகளிலும் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் தங்களை மீட்டுச் செல்லும்படி தொடர்ந்து வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பத்திரமாக மீண்டு வரவேண்டும் என பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.  தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரன் என்ற மாணவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். போருக்குப் பயந்து இவர் கார்கிவில் தஞ்சமடைந்திருக்கும் விடுதி ஒன்றின் … Read more

தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது – தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

‘தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள … Read more

உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது. முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் … Read more

உக்ரைனுக்கு ஃபைட்டர் ஜெட் விமானங்களை வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

பெல்ஜியம்: ரஷ்ய தாக்குதலால் தவிக்கும் உக்ரைனுக்கு ஃபைட்டர் ஜெட் விமானங்களை அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வந்துள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி, ஃபைட்டர் விமானம் வரை உக்ரைனுக்குக் கொடுத்து உதவப் போகிறோம். ஒரு உக்கிரமான போரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்கவுள்ளோம் என்றார். முன்னதாக உக்ரனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், … Read more

புடின் புது "ஸ்கெட்ச்".. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் ரஷ்யா தனது தாக்குதல் வேகத்தை குறைத்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், அணு ஆயுதங்களை சிறப்பு தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளதால், அவரது உத்திகளில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, உக்ரைனைப் பணிய வைக்க வேறு ஸ்கெட்ச் போட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் … Read more

நார்மல் டெலிவரிக்காக தீயாய் வேலை செய்யும் பிரபல நடிகை… வைரலாகும் வொர்க்கவுட் வீடியோ!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால் , கடந்த 2020ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கிவுதம் கிட்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேப்டனா இது… மனம் வலிக்கிறது… விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்! இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கடந்த சில நாட்களாக தனது பேபி பம்ப் … Read more

ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

 பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது. இந்த ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், பதவிக் காலத்தை ஜனாதிபதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. Source link

ரஷ்யக் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப புதின் அரசு தடை <!– ரஷ்யக் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப புதின் அரசு… –>

ரஷ்ய நாணயமான ரூபிள் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து மக்கள் வெளிநாட்டு பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்யா நாணயமான ருபிள் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து நாணய மதிப்பின் வீழ்ச்சியை சரிகட்ட இனி ரஷ்ய மக்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள அதிபர் புதின் தடை விதித்துள்ளார். மேலும் ரஷ்ய முதலீட்டாளர்கள் தங்களது 80 … Read more