இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டு.. பொதுமக்கள் கடும் அவதி..!

இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் 13 மணி நேரத்திற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய இலங்கை அரசால் பணம் கொடுக்க முடியாததாலும், போதுமான அந்நிய செலாவணி இல்லாததாலும் அந்நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மின் தடை காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லால்லாமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் கெட்டுப்போவதாக கடைக்காரர்களும், எந்திரங்கள் இயங்காததால் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு நிறுவனங்களின் தொழிலாளர்களும் கவலை … Read more

உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்கத் தவறியதாக கூறி, பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பொறுப்புக்கு வந்து 7 மாதங்களில், உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இழந்துள்ளார் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் Eric Vidaud. அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது, … Read more

சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு முறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905 விற்பனை மண்டலங்களில் வியாபாரம் செய்ய விரைவில் இ-டெண்டர்கள் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை மண்டலங்களில் கடைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். புதிய கடைகள் மற்றும் … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் நீங்கியது- 3 மாதம் முகக்கவசம் அணிவது நல்லது

சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்தும் முடக்கப்பட்டது. வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் “என்னடா இது நோய்” என்று புலம்பினார்கள். இதன் பிறகு கொரோனா பரவல் வேகம் எடுத்தது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு ஏற்ற வேண்டும், … Read more

வீடு மீது தாக்குதல்: அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜனதாவினர் முயற்சி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கடந்த 1990-களில் காஷ்மீரை விட்டு பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்லியிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மாநில சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. … Read more

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார். டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொகல்லா கிளினிக் போன்றவைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

கொரோனா உயிரிழப்பிற்கான நிவாரணம் பெற உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியீடு.!

டெல்லி: கொரோனா உயிரிழப்பிற்கான நிவாரணம் பெற உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு  மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. … Read more

‘400 ஏக்கர் பயிர்களும் கருகிவிடும்’- தண்ணீருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் அருகன்குளம் கிராமத்தில் பாசன குளத்திற்கு நீர் வரத்து நிறுத்தப்பட்டதால் 400 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மணிமுத்தாறு போன்ற பிரதான அணைகள் மூலம் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் நடைபெறும். நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த அருகன்குளம் பகுதியில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த டிசம்பர் … Read more

டார்ஜ்லிங் பயணத்தில் ‘மோமோஸ்’ செய்து அசத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அந்த மாநிலத்தில் உள்ள மலை மற்றும் சுற்றுலா தலமான டார்ஜ்லிங் சென்றார். இந்த பயணத்தின் கடைசி நாளான இன்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ‘மோமோஸ்’ விற்பனை செய்யும் கடையில் அவர் மோமோ செய்து அசத்தியுள்ளார்.  தனது டிரேட்மார்க் நீல நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற சேலையில் சென்றிருந்தார் மம்தா. குளிரை தாங்கும் வகையில் சாக்ஸ் மற்றும் சால்வையும் அணிந்திருந்தார். அப்போது … Read more

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ பட பிரபலம் – வெளியான தகவல்

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தோழி ப்ரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சித்தாரா … Read more