கச்சா எண்ணெய் பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி: இந்தியாவுக்கு ரஷ்யா ஆபர்| Dinamalar

புது டில்லி: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை உலக சந்தையில் குறைந்ததால், இந்தியாவுக்கு பேரல் ஒன்றுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் வழங்க முன் வந்துள்ளது. தற்போது இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றின் விலை 107 டாலராக உள்ளது. ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவிய பிப்., 24க்கு முன் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 94 டாலராக இருந்தது. தாறுமாறான விலையேற்றத்தால் இந்தியாவில் … Read more

கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகர் அஜித்தின் 61 வது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவதாகஇணைந்துள்ளனர். போனி கபூர் தான் தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் அஜித் இன்று அதிகாலை கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சுயம்புவாக வளர்ந்த ராதா வேம்பு.. யார் இவர்..? இந்தியாவின் பணக்கார பெண்..!

இந்திய பணக்கார பட்டியலில் இருக்கும் பெரும்பாலான ஆண் மற்றும் பெண் பில்லியனர்கள் அனைவரும் குடும்ப வர்த்தகம், குடும்பச் சொத்துக்கள் உடன் இடம்பெற்றவர்கள். சொந்தமாக வர்த்தகத்தைத் துவங்கி பில்லியனர் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தோர் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகத் தற்போது சுயமாகப் பில்லியனரானோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்படிப் பெண்கள் பட்டியலில் புதிதாக இணைந்தவர் தான் ராதா வேம்பு.. … Read more

வில்ஸ் ஸ்மித்தின் மன்னிப்பும், கிறிஸ் ராக்கின் பதிலும்.!

ஆஸ்கர் விழா எப்போதும் போலவே இனிமையாக முடிந்தாலும், இந்தாண்டு ஒரு ‘அறை’ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெறுவது இதுவே முதல்முறையாகும். விழாவை கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலை குறித்துக் … Read more

ஷாட்ஸ், பனியன்… ஃபாரின் டூரில் செம்ம மாடர்னாக ராதிகா சரத்குமார்!

வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராதிகா சரத்குமார் அங்கே ஷாட்ஸ், பனியன் என செம்ம மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் ஃபாரின் டூரில் மாடர்ன் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர். நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா சினிமாவில் அறிமுகமாகி 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு, சீரியலில் களமிறங்கிய நடிகை ராதிகா, சின்னத்திரையில் … Read more

தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி! விரைவில் துவங்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!

தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி  நடப்பாண்டில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் 2014 மற்றும் தமிழக அரசின் விதிகள் மற்றும் திட்டம் 2015ன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட 27,195 … Read more

“நம்பிக்கையளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!" – செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின்

மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, மூன்றாவது முறையாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சந்திக்க நேரம் … Read more

அரசு பள்ளியில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குடித்த 17 மாணவர்களுக்கு ஒவ்வாமை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குடித்த 17 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூங்கிலேரிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் 68 மாணவர்கள் படித்து வரும் நிலையில், மதிய உணவு இடைவெளிக்கு முன் பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குழந்தைகள் அருந்தியதாக கூறப்படுகிறது. அதன்பின், அடுத்தடுத்து 17 குழந்தைகளுக்கு மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், 17 பேரும் ஊத்தங்கரை அரசு … Read more

தமிழகத்தில் இன்று 35 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 17 பேர்: 51 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,825. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,51,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,494. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more