'ஆர் ஆர் ஆர்' இயக்குனருடன் என்னதான் பிரச்சனை: உண்மையை போட்டுடைத்த ஆலியா..!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ ஆர் ஆர் ஆர் ‘. இதில் ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர் , ஆலியா பட் , அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகியது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்துள்ள ராம் சரண் … Read more

விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பிய ரஷ்யர், அமெரிக்கர்

ரஷ்ய விண்வெளி வீரர் இருவரும், அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய விண்கலம் மூலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியுள்ளனர். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இத்தகைய சூழலில் இருநாட்டு விண்வெளி வீரர்களும் ஒரே விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியது விண்வெளித் துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்புக்குச் சான்றாக உள்ளது. அமெரிக்க வீரர் மார்க் வந்தே ஹெய், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 355 … Read more

இந்தியாவில் நடப்பாண்டில் மின்சார வாகனங்கள் விற்பனை 162 சதவிதம் உயர்வு – அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 162 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்த அவர், மார்ச் 13 நிலவரப்படி இந்தியாவில் 10 இலட்சத்து 95 ஆயிரம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 742 பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். பேட்டரி மாற்றும் கொள்கைப்படி, ஒரே அளவிலான பேட்டரியைத் தயாரிக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை … Read more

இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை தத்தெடுத்துள்ள கனேடிய தம்பதியர்: ஒரு வைரல் செய்தி

இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை கனேடிய தம்பதியர் தத்தெடுத்துள்ளார்கள். பொதுவாகவே இணையத்தில் நாய்கள் மற்றும் பூனைகள் தொடர்பான வீடியோக்களை விரும்புவோர் ஏராளம். அவ்வகையில் இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாயை கனேடிய தம்பதியர் தத்தெடுத்த செய்தியும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களைக் கவரும் விடயங்கள் என்னென்னவோ உள்ளன. ஆனால், Havilah Heger Wiley, Stephen தம்பதியரை ஒரு தெரு நாய் கவர்ந்துள்ளது. View this post on Instagram A post shared by HAVIE … Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே! வன்னியர் இடஒதுக்கீடு ரத்து குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் ராமதாஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே என தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது  என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பல காரணங்களை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து நிராகரித்து … Read more

லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டம்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை அணியில், 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நியூசிலாந்தின் மில்னே, கான்வே, சான்ட்னர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதில், சவுத்ரி, … Read more

பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதன்பின்னர் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டானின் … Read more

மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது பற்றி அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது; நீட் விலக்கு மசோதா குறித்து அழுத்தமாக கோரிக்கை வைத்தேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன் என டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது மற்றும் மன நிறைவு உடையதாக இருந்தது. கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி … Read more

நீட் குறித்து பிரதமரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன் -டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்த நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘’முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது 3வது டெல்லி பயணம் இது. உடனடியாக நேரம் ஒதுக்கி என்னை சந்தித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன். கோரிக்கைகள் மீது உடனடியாக … Read more