‘மன்மத லீலை’ முதல் ’செஃல்பி’ வரை: இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்!
இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ முதல் ஜி.வி பிரகாஷின் ‘செல்ஃபி’ வரை இந்தவாரம் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. ’மன்மத லீலை’ ’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ‘மன்மத லீலை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக, படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ஏகோபித்த வெய்ட்டிங்கில் காத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பாய்லர் போல் ரசிகர்களின் மனதை சூடாக்கியது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு … Read more