ஸ்டெலிங் பவுண்க்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபா

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவும் கொள்வனவு விலை 379 ரூபாவாகும் பதிவாகி உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை … Read more

பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு.. 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நேரடியாக உதவிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.  மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, ஏப்ரல் 2-ந் தேதி டெல்லியில் திறக்கப்படும் திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் … Read more

கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக நினைத்திருந்த பெற்றோருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி

இந்தியாவில் பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அவருக்கு கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த Shaheen Khan, Sohail தம்பதியருக்கு திங்கட்கிழமையன்று (மார்ச் 28)குழந்தை பிறந்தபோது, அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பிறந்த குழந்தை இரண்டு தலைகளுடன் காணப்பட்டது.  அத்துடன் அதற்கு மூன்று கைகளும், இரண்டு இதயங்களும் உள்ளன. அதாவது, சில நேரங்களில் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் இப்படிப் பிறந்து விடுவதுண்டு. அவை பொதுவாக இறந்தே பிறக்கும். … Read more

பான் கார்டுடன் ஆதார் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம்! ஆனால்….?

டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இணைக்காதவர்கள் பின்னர் இணைக்க முயற்சித்தால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் இன்று ஆதார் கார்டு இணைக்க மேலும் ஒரு வருடம் அவகாசம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,   நாளை முதல் (ஏப்ரல் 1ந்தேதி  … Read more

சமாஜ்வாடி கூட்டணியில் சலசலப்பு- அகிலேஷ் யாதவ், சிவபால் யாதவ் மீண்டும் பிரிய வாய்ப்பு

புதுடெல்லி:  உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவபால்சிங் யாதவுக்கும் இடையே கடந்த காலங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிவபால் யாதவ் பின்னர் சமாதானம் அடைந்து கட்சியில் மீண்டும் இணைந்தார்.  ஆனால் கட்சியில் அவருக்கு முன்புபோல் முக்கியத்துவம் அளிக்காத நிலையில், தனிக்கட்சி (பிஎஸ்பி) தொடங்கினார். அவர் பிரிந்து சென்றதால் கட்சியில் ஏற்பட்ட தாக்கம் தேர்தலில் எதிரொலித்தது. இதனால் கடந்த தேர்தலில் இருவரிடையே … Read more

இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் கார்களுக்கு சமமாக இருக்கும்- நிதின் கட்காரி

புதுடெல்லி: நாட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்றும் கட்கரி கூறினார். இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே அரசாங்கத்தின் கொள்கை என்றும் … Read more

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து

சென்னை: தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திமுக. எம்.பி. சண்முகம், சி.ஐ.டி.யூ. சவுந்தரராஜன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? : மாநிலங்களவையில் வைகோ கேள்வி..

சென்னை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என்றும், அதற்கான பின்புல காரணம் என்ன என்றும் மாநிலங்களவையில் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.  அதற்கு அமைச்சர் அளித்த விளக்கத்தையும் வைகோ வெளியிட்டுள்ளார்.மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்வி , “ கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா?1. 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா?2. … Read more

விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம் – போலீசார் விசாரணை

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது பெரியார் படிப்பகம். இதன் அருகில் மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையிலிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், முகம் மற்றும் மூக்கு அமைந்துள்ள பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. … Read more

நாட்டுக்காக உயிரையும் விட தயார் – அர்விந்த் கெஜ்ரிவால்

தனது வீட்டுக்குள் பாஜகவினர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, நாட்டுக்காக உயிரையும் விட தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார். காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோல, டெல்லியிலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த சில … Read more