பீகார் சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து முழக்கமிட்ட சிபிஐஎம்எல் உறுப்பினர்கள் வெளியேற்றம்..

பீகார் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட சிபிஐ எம்எல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 8 பேரை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அவையை விட்டு வெளியேற்றினர். பீகார் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சிபிஐஎம்எல் உறுப்பினர்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். அமரச் சொன்ன பிறகும் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்றப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து 8 எம்எல்ஏக்களையும் அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.  Source link

பிரித்தானியாவில் உச்சத்தை தொடும் வீடுகளின் விலை: அதிகரிக்கும் புதிய அழுத்தம்!

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது கடந்த 2004 பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலைஉயர்வாகும் எனவும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலையானது 265,312 பவுண்ட்கள் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33,000 … Read more

30 நிமிடம் சந்திப்பு: பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு தேவைகள் குறித்து பேசிய முதல்வர், டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, பிரதரிடம்  ‘நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்; உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை … Read more

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம்ஆண்டு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த 43-வது செஸ் ஒலிம்பியாட்டில் சீனா முதல் இடத்தை பிடித்தது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. முதல் முறையாக இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை நடத்தும் பெருமையை சென்னை பெற்றுள்ளது. இந்த போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. உக்ரைன் மீது ரஷியா … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் 3 கட்ட போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் காங்கிரசார் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அடுத்த கட்டமாக மாவட்டங்களிலும், 3-வது கட்டமாக மாநில தலைநகரங்களிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவிக்கப்பட்டு … Read more

ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும்போது கடந்த 5 மாதங்களில் ரூ.40 லட்சம் திருட்டு: தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும்போது கடந்த 5 மாதங்களில் ரூ.40 லட்சம் திருடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும்போது நூதன திருட்டு அம்பலமாகியுள்ளது. ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிய தனியார் நிறுவன ஊழியர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள நேரில் அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மேலும் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அதன் விவரங்கள் வருமாறு:* நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான  பிரச்சனை     * மீன்வளம் அ) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி … Read more

'ஆல்பர்ட்' தியேட்டரை ஜப்தி செய்தி சென்னை மாநகராட்சி: காரணம் என்ன?

சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை மாநகராட்சி. 2021 – 2022ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்கள் வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பிரபல திரையரங்கான எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கு பல வருடங்களாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் … Read more

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் கைது!

கேரளாவின் காசர்கோட்டில் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் விநோதமான சத்தம் கேட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் சத்தம் கேட்டு எழுந்தனர். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, கருவுற்ற ஆடு கூண்டுக்கு வெளியே ரத்தம் கசிய விழுந்து கிடப்பதைக் கண்டனர். ஒரு நபர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுவதையும் அவர்கள் கண்டனர். அவ்வாறு ஓடியவர் கிட்டத்தட்ட … Read more

ரூ.20 கோடி நஷ்டம் ; சிவகார்த்திகேயன் மனுவை தள்ளுபடி செய்யுங்க : ஞானவேல் ராஜா மனு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும், மீதி ரூ.4 கோடியை தரவில்லை. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் … Read more