ரஷ்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியா..!

இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், விலைவாசி என அனைத்திற்கும் பெரும் தலைவலியாகவும், சுமையாகவும் இருக்கும் கச்சா எண்ணெய்-ஐ யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவான விலையில் ரஷ்யா இந்தியாவிற்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அடுத்த சில வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இனி டீ-க்கு பிஸ்கட் எல்லாம் கிடையாது.. விலை தாறுமாறாக உயர போகுது..! ரஷ்யா – உக்ரைன் போர் ரஷ்யா – உக்ரைன் போர் … Read more

உலகளவில் கொரோனா தொற்று – 48,71 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48,71 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 கோடியே 71 இலட்சத்து 62 ஆயிரத்து … Read more

“சாதி அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீடு வழங்க முடியாது” – பாமகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

2021ம் ஆண்டு அதிமுக, வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பாமக மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று அறிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை வழங்க … Read more

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் மழை.!!

மன்னார் வளை குடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் … Read more

`வட சென்னை முதல் குதிரைவால் வரை'- சமகால சினிமாக்களில் கலையும் எம்.ஜி.ஆரின் பிம்பங்கள்! விரிவான அலசல்

எம்.ஜி.ஆர் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். ‘நாயகன்’ என்னும் சொல்லுக்கான முழுப்பரிமாணங்களை உடையவர். எம்.ஜி.ஆர் இறந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் ‘அவர் இறக்கவில்லை’ என்று நம்பிய சிலர் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும்கூட எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்து, அவர் கைக்கடிகாரத்தின் சத்தம் கேட்கிறதா என்று கேட்கும் சடங்கு தொடரத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர் பிம்பங்களால் கட்டப்பட்டவர். எம்.ஜி.ஆரைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவர் வள்ளலாக இருந்து உதவிய நேர்மறைக் கதைகளில் இருந்து சினிமாவில் அவர் பழிவாங்கிய நடிகர்களின் … Read more

எழும்பூர் “ஆல்பர்ட்” தியேட்டருக்கு சீல் வைப்பு – சென்னை மாநகராட்சி

சொத்துவரி வரி மற்றும் கேளிக்கை வரி செலுத்த தவறியதால், சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 2021 – 22 நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும், செலுத்த தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் … Read more

தேசிய ஊடகங்கள் முன்னிலையில் 'தமிழக ரிப்போர்ட் கார்டை' முதல்வர் வெளியிடுவாரா? – மநீம கேள்வி

சென்னை: வெளிப்படையான அரசை நடத்துகிறோம் என்று மகிழ்ந்துகொள்ளும் முதல்வர் நாளையாவது, தனது “ரிப்போர்ட் கார்டை” டெல்லியில் தேசிய ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 491ல், மாதந்தோறும் முதல் பணி நாளன்று தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து … Read more

மீனவர் பிரச்சினை | மத்திய அரசுடனான தமிழக உறவு மோசமாகும்: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் அச்சம்

புதுடெல்லி: இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர், மீனவர்கள் பாதிப்பால் மத்திய, தமிழக அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமடையலாம் என அச்சம் தெரிவித்தார். இது குறித்து மக்களவயில் தேனி தொகுதி எம்.பி.யான பி.ரவீந்திரநாத் பேசியதாவது: ”இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் நமது மீனவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை நான் இங்கு முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். … Read more

உக்ரைன் போர் உத்திகள் | ராணுவ ஜெனரல்கள் மீது அதிருப்தியில் ரஷ்ய அதிபர்: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்தியில் அதிபர் புதினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அதனால் புதின் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், “புதின் தனது ராணுவ ஜெனரல்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார். போர்க்களத் தகவல்களில் உண்மைக்கு மாறான நிலவரங்களை தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாக புதின் ஆத்திரத்தில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துருக்கி தலைநகர் … Read more

"இது தப்பு.. சரியில்லை".. இந்தியா – ரஷ்யா பேச்சு குறித்து.. அமெரிக்கா அதிருப்தி!

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது சரியல்ல. பெரும் ஏமாற்றமளிக்கிறது என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுமாறு இந்தியாவை, அமெரிக்கா வற்புறுத்தி வருவது நினைவிருக்கலாம். அமெரிக்காவுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவும் இந்தியாவை விமர்சித்துள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா செயல்படுவது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும், இது உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலை நியாயப்படுத்துவது போலாகி விடும் என்றும் இந்தியாவை இந்த … Read more