Dhanush:இந்த பையன் போய் ஹீரோவா?: தனுஷை பார்த்து 'ஷாக்' ஆன ஹீரோயினின் அம்மா

செல்வராகவன் இயக்கத்தில் அவரின் தம்பி தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகானவர் சோனியா அகர்வால் . முதல் படத்திலேயே யாருய்யா இந்த பொண்ணு என்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். காதல் கொண்டேன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோனியா அகர்வால் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, அந்த படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருந்தது. அவரை பார்த்ததும், இவரா ஹீரோ என்று என் அம்மா அதிர்ச்சி அடைந்துவிட்டார். உன் … Read more

அமைச்சரவையிடம் லிட்ரோ நிறுவனத்தின் கோரிக்கை: மீண்டும் அதிகரிக்குமா எரிவாயு விலை..!

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சமையல் எரிவாயுவிற்கான விலையை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது. விலையை அதிகரிப்பதற்கான … Read more

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம்.. விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறைவு

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் குன்மிங்கில் இருந்து குவாங்சூ நோக்கிச் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 – 800 ரக விமானம், குவாங்சி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 132 பேருமே உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. விமானத்தில் இருந்த 2 கருப்புப் … Read more

இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா..

ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது மேலை நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாட்டு அரசுகள் நிலையிலான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பால்டிக் கடல் வழிக்குப் பதில் விளாடிவாஸ்டாக்கில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் … Read more

விஜய் 66 அப்டேட்: ராஷ்மிகா, கீர்த்தி சனோன், திஷா பதானி… வம்சி இயக்கும் படத்தின் நாயகி யார்?

விஜய்யின் ரசிகர்கள் குஷியில் திளைக்கிறார்கள். ‘பீஸ்ட்’ டீசர் வெளிவரும் சந்தோஷம் ஒரு புறம், விஜய் 66 படம் துவங்கப்போகிறது என்ற செய்தி இன்னொரு புறம். தமிழில் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இப்போது ‘விஜய்-66’ படத்தை இயக்குகிறார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கி வரும் படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜு, ‘விஜய் 66’ஐயும் தயாரித்து வருகிறார். இயக்குநர் வம்சி, தில் ராஜூ, விஜய் சமீபகாலமாக விஜய் படத்தின் இயக்குநர்கள், ஹீரோயின்கள் விஷயத்தில் கிரியேட்டிவ்வாக … Read more

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் விரைவில் தீர்வு! முக்கிய வார்த்தைகளை உதிர்த்த தமிழர்

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று தமிழரான திருமூர்த்தி கூறியுள்ளார். தமிழத்தை சேர்ந்த டி.எஸ் திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதராக உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்தே சூழல் மோசமடைந்து வருகிறது. உக்ரைன்- ரஷ்யா போா்ச் சூழல் ஏற்கெனவே வளரும் நாடுகள் உள்பட சா்வதேச பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் விரைவில் தீா்வு எட்டப்படும். ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை … Read more

தமிழ் நாட்டில் உள்ள ஈர நிலங்களின் மதிப்பு ரூ. 17000 கோடி… சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்…

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தமிழகத்தில் உள்ள 42000 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை பாதுகாத்து வருகிறது. இதில், முதல்கட்டமாக 141 ஈரநிலங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளில் 80 ஈரநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ரூ. 4,386.6 கோடி ரூபாய் ஆண்டு மதிப்புள்ள இந்த 80 … Read more

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நூதன போராட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை போட்டு கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பே போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வீடுகள், கட்சி அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் களைகட்டியது. வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தண்டையார்பேட்டையில் சர்க்கிள் தலைவர் சையது முன்னிலையில் மாவட்ட தலைவர் … Read more

கோடை வெயில் கொளுத்துவதால் புற்றுகளை விட்டு பாம்புகள் வெளியே வர வாய்ப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்ட தொடங்கி விட்டது. கோடை வெப்பத்தில் வெளியே வரும் பாம்பு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது வழக்கம். இதுபோல பூமியில் புற்று தோண்டி வசிக்கும் பாம்புகளும், புற்றை விட்டு வெளியே வருவது உண்டு. கிராமப்புறங்கள், வயல்வெளிகள் உள்பட நகர்புறங்களில் கூட புற்றை விட்டு வெளியே வரும் பாம்புகள் சுற்ற தொடங்கும். பாம்பை கண்டால் படையே நடங்கும் என்பது போல பொதுமக்களும் அதனை … Read more

பயத்தால் புதினிடம் தவறான தகவல்களை சொல்லும் ஆலோசகர்கள்: அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படையால் கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருவதால் ரஷிய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை. உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்து வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் அவரது நாட்டு ராணுவத்தாரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை … Read more