நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறினார். சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை வழங்க வேண்டும், கர்நாடகம் காவிரியில் மேகதாது அணையை கட்ட நுமதிக்க கூடாது என்றும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

"தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் எம்ஜிஆருக்கு அவமதிப்பு" – ஓபிஎஸ் கண்டனம்

திமுக அரசு விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை அவமதித்துள்ளதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய சதுக்கத்திட்ட தொடக்க விழா குறித்து நாளிதழில் வெளியான அரசு விளம்பரங்களை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், “அதில் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று உள்ளது. ஆனால், அந்த இடத்திற்கு  ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்றுதான் பெயர். இதில் புரட்சித்தலைவர் என்ற சொற்கள் வேண்டுமென்றே  விடுபட்டுள்ளது. இது திமுக அரசின் … Read more

பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்வி – பொறுமை இழந்து சீறிய பாபா ராம்தேவ்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து யோகா குரு பாபா ராம் தேவ் சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நிருபர் ஒருவர் இன்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்வியால் பொறுமை இழந்த யோகா குரு பாபா ராம்தேவ், அவரை கடுமையாக வசைபாடினார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை ஆதரித்து பாபா ராம்தேவ் பேசி வந்தார். அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “எனக்கு தெரிந்த வரை, பெட்ரோல் லிட்டருக்கு … Read more

'சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள்' – 'டாணாக்காரன்' பட தயாரிப்பாளர்

பெரிய படங்களை தவிர சின்ன படங்களுக்கு மக்கள் வரமுடியாத சூழல் உள்ளது, கொரோனாவுக்கு பிறகு சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள் என்று டாணாக்காரன் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார் விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ் , டாணாக்காரன் படத்தில்  காவலர்களின் பயிற்சி முகாமில் … Read more

ஜூலை 17ல் நீட் நுழைவுத் தேர்வு| Dinamalar

புதுடில்லி: பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு இந்திய இளவில் நடைபெறும் நுழைத்தேர்வு நீட். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்.,2) முதல் மே 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி: பொது மருத்துவம், … Read more

ஏப்ரல் 28ல் 'ஐங்கரன்' ரிலீஸ் – ஜி.வி.பிரகாஷிற்கு டபுள் கொண்டாட்டம்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார் . அவர் நடித்துள்ள செல்பி படம் நாளை(ஏப்., 1) வெளியாகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார் . நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில பிரச்னைகளால் படம் வெளியாகாமல் … Read more

இனி டீ-க்கு பிஸ்கட் எல்லாம் கிடையாது.. விலை தாறுமாறாக உயர போகுது..!

டீ-க்குப் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதைத் தாண்டி பல கோடி பேர் இந்தியாவில் ஒரு வேளை உணவாகவும் இந்தப் பிஸ்கட் பாக்கெட் விளங்குகிறது. இப்படிப்பட்ட முக்கியமான பிஸ்கட் விலையை உயர்த்த நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலையால் மக்கள் அதிகப்படியான சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது இதன் பாதிப்பு உணவு பொருட்கள் மீதும் எதிரொலித்துள்ளது. இந்திய அரசின் சூப்பர் முடிவு.. இனி எரிபொருள், உலோகங்கள், சிமெண்ட் விலை குறையலாம்.. … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,233 ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. … Read more

பாரதியை யோசிக்க வைத்த லட்சுமி… உண்மை தெரிந்துவிடுமோ…!

Bharathi Kannamma Serial Rating Update With promo : என்ன டாக்டர் அப்பா ஃபேன் கீழ விழுந்ததும் மலரும் நினைவுகளுக்கு போய்ட்டீங்களாக என்று கேட்பது போன்று பாரதி கண்ணம்மாவின் இன்றையை எபிசோடு கவனம் ஈர்த்துள்ளது. விஜய்டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை நெருங்கி வரும் இந்த சீரியல், முதலில் இருந்து தற்போதுவரை ஒரு சின்ன உணமையை வைத்துதான் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த உண்மையை சொல்லிவிட்டாலும் சீரியலின் கான்செப்ட் மாறி … Read more